மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் தம்பதிகள் இருவர் நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், உயிரிழந்தவர்களின் மகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டைக் கொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட புலனாய்வாளர்கள் கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர்.
புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தில் பெயரில் இந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 8ம் திகதி செங்கலடிச் சந்தி பதுளை வீதியிலுள்ள வீடொன்றில், செங்கலடி விப்ரா பென்சி கோணர் உரிமையாளர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி ரகு விப்ரா ஆகிய இருவரும் இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten