தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 april 2013

அமைச்சர் றிசாத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் வேதநாயகம் எழுதிய கடிதம் கசிந்தது!


முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்குடியேற்றம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு தொலை நகல் உண்மையான நிலையினை விளக்கப்படுத்தி கடிதமொன்றை 2013.04.23 ஆம் திகதி அனுப்பியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக வடக்கில் மேற்கொள்ளப்படும் முஸ்லிம் மக்களது மீள்குடியேற்றத்திற்கு எதிராக திட்டமிடப்பட்ட முறையில் பல்வேறு அமைப்புக்களும், சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு உண்மைக்கு புறம்பான் செய்திகளை வெளியிட்டுவரும் நிலையில் அண்மையில் அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமுன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், ஆகியோர் தெளிவுபடுத்தி உடகங்களுக்கு அறிக்கைகள வெளியிட்டிருந்தனர்.
வடக்கில் முஸ்லிம்கள் வாழந்த பிரதேசங்களில், இடம் பெயரக்கப்பட்ட முஸ்லிம்களே தற்போது மீள்குடியேற வருவதாகவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் செய்து கொடுத்துவருவதாகவும், இதற்கு இனவாதம் கற்பித்து மேற்கொள்ளப்படும் பொருத்தமற்ற ஆர்ப்பாட்டங்களைவிடுத்து நேரடி விவாதத்துக்கு வருகைத் தருமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்..
இந்த அழைப்புக்கு பதிலளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வராது, தொடர்ச்சியாக முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு கூட சென்றிருப்பதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில் வெளிமாவட்ட முஸ்லிம்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் பலவந்தமாக மீள்குடியேற்றுவதாவும், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான அரச அதிகாரிகள் அதற்கு எதிரப்பு வெளியிட்டுவருவதாகவும், பிழையான செய்திகளை இக் கூட்டமைப்பும், நேற்று முளைத்த நிரந்தர முகவரியற்ற அமைப்புக்களும் வெளியிட்டுவருவதை இந்த அதிகாரிகள் கண்டித்துள்ளதுடன், உண்மைத் தன்மையினை தெளிவுபடுத்தி முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் தமது கையொப்பத்துடன் அறிக்கையொன்றினை அனுப்பியுள்ளார்.
இதற்கு முன்னர் அரசாங்க அதிபர் இவ்வாறான விளக்கத்தை வெளியிட்டுள்ள போதும், அதனை மறைத்து சிலர் செயற்படுவதாலும்,அண்மையில் முள்ளியாவலையில் இடம் பெற்ற சம்பவத்தையடுத்து, இதனோடு முஸ்லிம்களையும், முஸ்லிம் தலைமைகளையும் சம்பந்தப்படுத்தி வெளியான அறிக்கைகளின் அடிப்படையில் சில நடவடிக்கைகளையும் அரசாங்க அதிபர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க அதிபர் என்.வேதாநயாகம் அவர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தினையும் வாசகர்களின் நலன் கருதி இத்துடன் இணைத்துள்ளோம்.
அரசாங்க அதிபர் அக்கடிதத்தில் தெளிவாக தெரிவித்துள்ள விடயம் என்னவெனில்,1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இருந்து 1470 முஸ்லிம் குடும்பங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்தனர். இவர்கள் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் எமது மாவட்டத்தில் மீள்குடியேற தொடங்கியதாகவும், இவர்கள் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அதிபர் அவர்களின் அறிக்கையே இறுதியானதும், உறுதியானதும் அரச இயந்திரத்தினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய சான்றுமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
Letterto-GA-285x300

Geen opmerkingen:

Een reactie posten