தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

அமெரிக்காவின் வீண் தலையீட்டை அனுமதிக்க முடியாது!- சீறுகிறார் இலங்கை ஜனாதிபதி


இலங்கையில் ஏழு தொலைக்காட்சி விளம்பரங்களை தடை செய்யத் தீர்மானம்
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 04:10.00 AM GMT ]
இலங்கையில் மக்களை திசை திருப்பும் வகையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வந்த ஏழு தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு தொலைக்காட்சி விளம்பரங்களில் திருத்தங்களை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவுச் சட்டத்தின் அடிப்படையில் சுகாதார ஆணையாளர் நாயகம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட அனைத்து விளம்பரங்களும் மக்களை திசை திருப்பும் வகையிலானவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
போலியாக போசனைப் பதார்த்தங்கள் அடங்கியுள்ளதாகத் தெரிவித்து இந்த விளம்பரங்கள் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன.

சவூதி சிறைச்சாலையில் இலங்கையர் மரணம்
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 04:25.49 AM GMT ]
சவூதி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சவூதி அரேபியாவில் தொழில் நிமித்தம் சென்று, குற்றச் செயல் ஒன்றுக்காக ரியாத் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டு கடவுச் சீட்டு இன்றி நாட்டில் தங்கியிருந்தமைக்காகவே குறத்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
நாத்தாண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

இலங்கை, பொதுநலவாய நாடுகள் உறுப்புரிமையை இழக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது!- ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 04:29.08 AM GMT ]
இலங்கை, பொதுநலவாய நாடுகளின் உறுப்பு நாடு என்ற தகுதியை இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் வழக்கறிஞர்கள் இலங்கைக்கு எதிரான நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் வழக்கறிஞர்கள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.  பொதுநலவாய நாடுகளின் அடிப்படை தன்மையினை இலங்கை மீறியுள்ளதாக தெரிவித்தே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுநலவாய நாடுகள் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படக் கூடிய  அச்சுறுத்தல் எதுவும் இதுவரையில் ஏற்படவில்லை என பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.
சிரச மீது அச்சுறுத்தல் விடுத்தோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!- கரு ஜயசூரிய
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 04:29.53 AM GMT ]
சிரச ஊடகம் மீது அச்சுறுத்தல் விடுத்தோருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். 
அரசுடன் எவ்வித குண்டர்களும் இல்லையென்றால் குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு நெருக்கமான ஊடக நிறுவனங்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை குறித்து; கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் சிரச ஊடக நிறுவனம் மீதான அச்சுறுத்தல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் கரு ஜயசூரிய கோரியுள்ளார்.
அமெரிக்காவின் வீண் தலையீட்டை அனுமதிக்க முடியாது!- சீறுகிறார் இலங்கை ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 04:40.02 AM GMT ]
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளைச் செய்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஜனாதிபதி. சில தரப்புகளின் தேவையற்ற தலையீடுகளும், அழுத்தங்களும் நாட்டுக்கு எதிராகச் சதிசெய்யும் ஒரு தரப்பு இருப்பதையே கோடி காட்டுவதாகவும், அமைச்சர்கள் இது தொடர்பில் மிகவும் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா அண்மைக் காலமாக மேற்கொண்டு வரும் தலையீடுகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விலாவாரியாக எடுத்துக் கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அண்மையில் மின்கட்டண அதிகரிப்பு விடயத்திலும் அமெரிக்கா தலையிட முயற்சிகளை எடுத்ததாகவும், இவ்வாறானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சுயாதிபத்திய இறைமையுள்ள ஒரு நாடு. அதன் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நாம் அனுமதியளிக்கப் போவதில்லை.
எமது நாட்டின் மீது மேற்குலக நாடுகள் தலையீடுகளைச் செய்வது சாதாரண விடயமல்ல. நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் ஒரு சதி நடக்கிறதா என்றே நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
எனவே, அமைச்சர்மார் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்'' என்ற சாரப்பட ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்தார் என அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

Geen opmerkingen:

Een reactie posten