தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 april 2013

மஹிந்தரின் அச்சம் தோல்வியின் ஆரம்பமா?


மஹிந்தரின் அச்சம் தோல்வியின் ஆரம்பமா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதியுடன் ஆளும்தரப்பு அரசியல்வாதிகள் பலர் இரகசிய செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நி்லையில் அவர்களது செயற்பாடுகளை ஆராய அரசாங்கம் விசேட குழுவொன்றை அமைத்துள்ளது.
அரசாங்கத்தில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்களின் ஆலோசனையுடன் இளம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி தெரிவு செய்யப்பட்ட குழுவினர் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றினை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களிடம் சமர்ப்பதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்காவின் இன்றைய நிலவரப்படி உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவு மக்களை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கையீனம் குறைந்து ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நிலைப்பாடு காணப்படுவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மீள் பிரவேசம், மஹிந்த ஆட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என்ற அச்சமே, இந்த விசேட குழு அமைப்பதற்கான காணரமாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten