தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 april 2013

நீங்களும் போற்றத்தக்க வலுவுள்ள திறமையானவர்கள் என்பதை மனதிற் கொண்டு செயற்படுங்கள் மயிலிட்டியைச் சேர்ந்த லண்டனில் வசித்து வரும் புலம்பெயர் உறவின் நிதிப்பங்களிப்பில் சி.சிறீதரன்!!


எத்தடை வரினும் அதனை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வாழ்பவர்களாகவும் நம்பிக்கையில் தளர்ந்து விடாது தமது முயற்சியை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் மாற்று வலுவுடையோர்கள் வரவேண்டுமென பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டியைச் சேர்ந்த லண்டனில் வசித்து வரும் புலம்பெயர் உறவான சி.இராசசுந்தரம் (சிங்கவாகனம்) அவர்களின் நிதிப்பங்களிப்பின் மூலம் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் 50 பேருக்கு தலா 8,000 ரூபா வீதம் நான்கு இலட்சம் ரூபா பண உதவு தொகையும், உடுபுடைவைப் பொதிகளும் வழங்கும் நிகழ்வு இன்று காலை   9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் மாற்று வலுவுடையோர் சங்கத்தலைவர் தி.சிவமாறன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் தனது உரையில்  மேலும் குறிப்பிடுகையில்,
எமது புலம்பெயர் உறவுகள் பல்வேறுபட்ட கஷ்டங்களுக்கு மத்தியில் தான் தாயக உறவுகளுக்கான உதவிகளைச் செய்கின்றார்கள். இப்படியான உதவிகள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவை.
மாற்றுவலுவுள்ளவர்களாக இருக்கின்ற இந்த சிறார்கள் கல்விகற்க வேண்டும். அவர்கள் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக லண்டன் உறவான மயிலிட்டி சிங்கவாகனம் இராசசுந்தரத்தால் இவ்வுதவிகள் வழங்ஙகப்படுகின்றன.
இங்குள்ள மாற்றுவலுவுடையவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறன்களை உடையவர்களாகவும் அதில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற அவாவுடன் தான் காணப்படுகின்றார்கள். தம்மாலான மனிதாபிமானப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறார்கள்.
எமது இனத்தின் விடிவுக்காக உழைத்தவர்கள் பலரும் இவ்விடத்தில் இருக்கின்றார்கள். எமது தேசத்தில் எமக்கான உரிமைகள் அனைத்தையும் பெற்று எமது பண்பாடு கலாசாரங்கள் அனைத்தையும் பேணி நாமும் மனிதர்களாக வாழ்வதற்காகவேதான் நாமும் விரும்புகின்றோம்.
உங்கள் நம்பிக்கையில் இருந்து தளர்ந்துவிடாது நீங்களும் போற்றத்தக்க வலுவுள்ள திறமையானவர்கள் என்பதை மனதிற் கொண்டு செயற்படுங்கள் உங்களுக்கு எம்மால் ஆன பணிகளை நாமும் செய்வோம் என்றார்.
இந்நிகழ்வில் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்களான இ.பொன்னம்பலநாதன், வி.சுவிஸ்கரன். கோப்பாய் பிரதேசசபை உறுப்பினரான ந.ரூபதாஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்ட கிளைச்செயலாளர் சு.பசுபதிப்பிள்ளை, அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கு.சர்வானந்தன், வரோட் நிறுவனத்தின் சமூக வலுவூட்டலாளர் அ.விக்கினேஸ்வரி, உதவி வழங்கிய இலண்டன் சி.இராசசுந்தரத்தின் உறவினர்களான மயிலிட்டியைச் சேர்ந்த வீ.செல்லக்கதிரமலை, இ.தில்லைராசா (குட்டி ஐயா), த.வெள்ளிமயில், சு.ரவேந்திரன், சி.கமலினி, ர.பிரியானி ஆகியோரும் கலந்து கொண்டு மேற்படி உதவிகளை வழங்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Geen opmerkingen:

Een reactie posten