இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலலங்கை ஜனாதிபதி மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும், தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவண்ணாரப்பேட்டை, ஏ.இ. கோவில் தெருவில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழ் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கீதாபச்சையப்பன், திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராசு, தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் அறிவரசன், பேரறிவாளனின் தாய் அற்பு தம்மாள் மற்றும் பெண்கள், மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten