தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 april 2013

ஆளும் கட்சியில் இணைந்திருப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும்: முஸ்லிம் காங்கிரஸ்!


வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் ஐ.தே.க போட்டியிடும்: ரணில் விக்கிரமசிங்க
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 01:48.22 AM GMT ]
வடக்கில் தேர்தல் நடாத்துவதற்கு முன்னர் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி அதில் போட்டியிடும் அவர் அறிவித்துள்ளார்.
எட்டு மாகாணங்களில் தேர்தல் நடத்தி வடக்கில் மட்டும் தேர்தல் நடத்தப்படாமை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனினும், கட்டம் கட்டமாக தேர்தல் நடாத்துவதில் உடன்பாடு கிடையாது.
அரசாங்கத்தை மாற்றக் கூடிய ஓர் தேர்தலையே நாம் விரும்புகின்றோம்.
வடக்கில் தேர்தலை நடாத்துவதற்கு முன்னதாக சுயாதீன பொலிஸ், தேர்தல், பொதுச் சேவைகள் ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டும்.
நீதிமன்ற நடவடிக்கைகள் சுயாதீனமாக்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது.
உதயன் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
வடக்கில் தேர்தல் நடாத்த வேண்டுமாயின் அங்கு சிவில் நிர்வாகத்தை உருவாக்க வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
கடன் அடைக்கும் நோக்கில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: ரணில்
அரசாங்கம் கடனை அடைப்பதற்காகவே மின்சாரண கட்டணத்தை அதிகரித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க பருத்தித்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வெளிநாடுகளிடம் இருந்து எண்ணில் அடங்காத அளவுக்கு கடன்களை பெற்றுள்ளது
இந்த நிலையில் பெற்ற கடனை அடைப்பதற்காகவே பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகின்றது.
அதன் அடிப்படையிலேயே தற்போது மின்சார கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதது.
தற்போதைக்கு மின்சார கட்டணத்தை அதிகரித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் முடக்கப்படும் ஜனநாயகம்: ஜே.வி.பி. குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 02:01.17 AM GMT ]
நாடாளுமன்றில் மக்களின் கருத்துக்களுக்கு இடமில்லை என ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிடும் உரிமை கூட முடக்கப்படுகின்றது.
குறைந்தபட்சம் பொதுமக்களின் சார்பில் வாக்குகளைப் பயன்படுத்தக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
சாதாரண பொது மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் பல்வேறு சட்டங்களை அரசாங்கம் நாடாளுமன்றில் அறிமுகம் செய்துள்ளது.
எமது கருத்துக்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாதிருக்கலாம் எனினும், மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தை வழங்க வேண்டும்.
இந்த நாடாளுமன்றில் ஜனநாயகம் கிடையாது, அதனை அடையாளப்படுத்தும் நோக்கிலேயே எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசையின் மீது ஏறி எதிர்ப்பை வெளியிட்டோம்.
நாடாளுமன்றை இழிவுபடுத்துவது எமது நோக்கமல்ல, நாடாளுமன்றில் ஜனநாயகம் கிடையாது என்பதனை உணர்த்துவதே எமது இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆளும் கட்சியில் இணைந்திருப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும்: முஸ்லிம் காங்கிரஸ்
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 02:05.57 AM GMT ]
அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றையதினம் தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கட்சியின் பிரதான அமைப்பாளர் ரஜாப்தீன் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட ரஜாப்தீன், மக்கள் குறித்து சிந்திக்காமல் அரசாங்கம் பாரிய அளவில் மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளது.
இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் பெரும்பாலும் மக்களுக்கு பாதகமானதாகவே அமைந்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளையும் அரசாங்கம் பார்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர, அதற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதாக தெரியவில்லை.
இந்த நிலையில் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருப்பது பிரயோசனமானது என்று நாம் எண்ணவில்லை.
இந்த நிலையில் இது தொடர்பில் ஆராய்வதற்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் இன்றைய தினம் ஒன்றுகூடவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten