பொலிஸ் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எழும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை!- பொலிஸார்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 03:43.19 AM GMT ]
இலங்கை பொலிஸ் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட கைதிகள் துன்புறுத்தப்படுவதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள மனித உரிமை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் கடற்படை அதிகாரிகள் 250 பேருக்கு இந்திய கப்பல்களில் தற்போது பயிற்சி பெற்று வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மேம்பாடு தொடர்பில் காவல்துறையினருக்கு விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கைதிகள் மீது சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பில் மனித உரிமை ஆணையகத்தில் அல்லது நீதிமன்றில் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படை அதிகாரிகள் 250 பேருக்கு இந்திய கப்பல்களில் பயிற்சி!- அசோக் கே.காந்தா
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 03:53.33 AM GMT ]
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புலப்படாத சக்தி வாய்ந்த உறவு இன்னும் நீடிக்கின்றது. இந்த உறவு பழங்காலத்தில் இருந்து காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் களமிறங்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தயா மாஸ்டர் வடமாகாண தேர்தலில் களமிறங்கக் கூடிய சாத்தியம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 05:44.33 AM GMT ]
தேர்தலில் போட்டியிடுவது குறித்து தயா மாஸ்டர் நேரடியாக எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.
இதுவரையில் எந்தவொரு கட்சியும் தேர்தலில் போட்டியிடுமாறு தம்மிடம் நேரடியாக கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ஆளும் கட்சியின் வேட்பாளராக தயா மாஸ்டரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இறுதிக் கட்டப் போரின் போது தயா மாஸ்டர் படையினரிடம் சரணடைந்திருந்தார்.
ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்களான கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர், ஆளும் கட்சியின் சார்பில் அரசியலில் களமிறங்கி முக்கிய பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தயா மாஸ்டர் தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கடமையாற்றி வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten