தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 april 2013

எழுச்சி கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம்: ஆர்வத்துடன் மக்கள் பங்கெடுப்பு! அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளில் தொடர் கூட்டங்கள்!


தமிழீழ சுதந்திர சாசனதத்தினை அச்சத்தோடு சிங்கள அரசு பார்த்து வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. 
அமெரிக்கா - ஐரோப்பா - அவுஸ்றேலியா என ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற தேசங்கள் மட்டுமல்ல தமிழகம் - மலேசியா என தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பங்கெடுப்பில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்து வருகின்றனர்.
பொதுக்கூட்டங்கள் - சந்திப்புக்கள் ஊடாக சாசன உருவாக்கத்திற்கான கேள்விக்கொத்துக்கள் மக்களைச் சென்றையும் சமவேளை எனும் இணைத்தளவழியேயும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் (28-04-2013) ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா - பிரித்தானியா ஆகிய நாடுகளில் தமிழீழ சுதந்திர சாசனத்தினை மையப்படுத்திய பொதுக்கூட்டங்களும் சந்திப்புக்களும் இடம்பெறுகின்றன.
பிரித்தானியா:
கொவென்றி பகுதியில் மாலை 4மணிக்கு எனும் Sree Bharathalaya Mahavidyalayam /134 Station West / Foleshill Conventry / CV6 5ND முகவரியில் பொதுக்கூட்டம் இடம்பெறுகின்றது.
பிரான்ஸ்:
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சு நடத்துகின்ற சலங்கை நிகழவ்வில் தமிழீழ சுதந்திர சாசன அறிமுக அரங்கு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இடம்பெறுகின்றது.
மதியம் 13மணிக்கு 50 Rue de Torcy/ 75018 Paris எனும் முகவரியில் உள்ள மாக்ஸ் டோர்முவா பெரிய மண்டபத்தில் இடம்பெறுகின்றது.
அமெரிக்கா:
மதியம் 2:30மணிக்கு 10 Arborwood Ct / Sewell, NJ 08080-2822. எனும் முகவரியில் தமிழீழ சுதந்திர சாசன மாநாடு தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம் இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வுகளில் தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பிலான விளக்க கையேடுகள் மற்றும் கேள்விக் கொத்துகள் பரிமாறப்பட இருப்பதோடு பிரதிநிதிகளின் கருத்துரைகளின் பார்வையாளர்களின் கருத்துக்களை உள்ளடக்கிய கலந்துரையாடலும் இடம்பெறுகின்றன.


Geen opmerkingen:

Een reactie posten