தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 april 2013

காங்கிரஸின் கயவாலித் தனம்


காங்கிரஸின் கயவாலித் தனம்
------------------------------------------
“நமீபத்தில் செல்சியாவின் அருங்காட்சியகத்தில் 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு பிரிட்டன் படையினர் இரண்டாம் உலகப்போரின் போது யுத்தம் செய்ததை பட்டியலிட்டனர்

இதில் 5 யுத்தங்கள் இடம் பெற்றிருந்த தேர்வில், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினருடன் நடைபெற்ற யுத்தமே பிரிட்டன் படையினர் போரிட்ட மிகப்பெரிய யுத்தமாக தேர்வு செய்யப்பட்டது.

இந்த யுத்தம் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலும், நாகலாந்து தலைநகர் கொஹிமாவிலும் நடைபெற்றது

இப்போரில் ஜப்பான் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தினரில் 53,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பிரிட்டன் படையை சேர்ந்த 16,500 வீரர்களும் கொல்லப்பட்டனர்.”

வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்று முடிவெடுத்த காரணம் இதுதான். ஆனால் போரிட்டவர்களை அழைத்து சுதந்திரம் கொடுத்தால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அவமானம் என்று காந்தி கும்பலை அழைத்து பேசி ஒப்படைத்தான். இதுதான் உண்மை.

பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் களவானி கும்பல் இந்த உண்மை வரலாற்றை மறைத்தது. ஏதோ ‘கத்தியின்றி ரத்தமின்றி’ சுதந்திரம் பெற்றதாய் ஊளையிட்டு..ஊளையிட்டே வரலாற்றை மாற்றியது.

வீரம்செரிந்த ஒரு வரலாற்றுப் போரை
மூடி மறைத்தது காந்திய குல்லாய்.....

Geen opmerkingen:

Een reactie posten