[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 08:23.22 AM GMT ]
மட்டக்களப்பில் சித்திரை புத்தாண்டு காலத்தில் வர்த்தக நடவடிக்கைகளின்போது மோசடியில் ஈடுபட்ட 95 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, செங்கலடி, கிரான், மட்டக்களப்பு நகரம் உட்பட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் பேரில் இந்த சுற்றிவலைப்பு தேடுதல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.
வன்னி வர்த்தகர்களுக்கு இந்திய அரசு நிதியுதவி!
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 07:53.59 AM GMT ]
இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்கு செல்லும் இந்திய நாடாளுமன்ற குழு அங்குள்ள நிலைமைகளை
பார்வையிடுவதுடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் 1,230 பேருக்கு இந்திய அரசின் நிதியுதவிகள் இன்று வழங்கி வைக்கப்படவுள்ளன.
பார்வையிடுவதுடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் 1,230 பேருக்கு இந்திய அரசின் நிதியுதவிகள் இன்று வழங்கி வைக்கப்படவுள்ளன.
வடபகுதிக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு நேரடியாக சென்று இந்திய நிதி உதவியில் மேற்கொள்ளப்படும் நிலைமைகளை பார்வையிட்டு திரும்பியுள்ள நிலையில்,
இந்திய அபிவிருத்தி கூட்டு நிர்வாகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலாளர் எஸ்.ராகவன் மற்றும் இந்திய சிறப்பு நிதி ஆலோசகரும் வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலாலருமான பமல் ஜீல்கா அடங்கிய இருவரும் கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு சென்று நிலைமைகளை ஆராய்கின்றனர்.
அதுமட்டுமல்லாது, பளை சேரான் பற்றுக் கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்ட 65 வீடுகளை மக்களிடம் கையளிப்பதுடன் கிளிநொச்சி கூட்டுறவு மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் வர்த்தகர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்விலும் பங்கேற்கின்றனர்.
இவர்களுக்கு வளங்குவதற்கென இந்திய அரசாங்கம் 91 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten