தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 april 2013

புலி ஆதரவாளர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர்!- அரசாங்கம்!!


யாழ்.சென்றுள்ள அமெரிக்க குழு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசவுள்ளது!
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 12:27.50 AM GMT ]
இலங்கை  சென்றுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான குழுவினர் இன்று புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க குழுவினர், அங்கு இனந்தெரியாத காடையர்களால் அண்மையில் தாக்குதலுக்கு இலக்கான உதயன் பத்திரிகை அலுவலகத்தை சென்று பார்வையிட்டுள்ளனர்.
இவர்களின் யாழ். விஜயத்தின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தர்களையும் சந்தித்து வடபுல சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தநிலையில் இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து, சமகால யாழ். மக்களின் நிலைமைகள் மற்றும் நில அபகரிப்பு, படைகளின் அடாவடிகள் குறித்து தெளிவுபடுத்தவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

புலி ஆதரவாளர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர்!- அரசாங்கம்
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 02:01.01 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முயற்சித்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தனி ஈழத்தை அமைப்பதற்கு சர்வதேச ரீதியான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டுமென கோருகின்றனர்.
பயங்கரவாத சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்கிய ஜனாதிபதியை பதவியை விட்டு விலக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ட்ரான்பெரன்சி இன்டர்நெசனலின் தலைவர் ஜே.சீ. வெலியமுன போன்ற தரப்பினர் புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியதில்லை.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கே ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தினார் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten