காலம் மக் ரே,,,, ஷர்மாவிடம் கோரிக்கை: மாநாட்டின் இடத்தை மாற்றுங்கள் !
25 April, 2013 by admin
சனல் 4 கின் கொலைக் களங்கள் ஆவணப்பட தயாரிப்பாளரான காலம் மக் ரே அவர்கள், காமன்வெலத் நாடுகளின் தற்போதைய தலைவராக கமலேஷ் ஷர்மாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் காமன்வெலத்தின் உச்சி மாநட்டை நடத்தவேண்டாம் என்றும், இலங்கையில் மனித உரிமை இன்னும் மேம்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனது டிவீட்டர் மற்றும் பேஃஸ் புக் ஊடாக அவர் இன்று பாரிய விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என அறியப்படுகிறது.
காமன்வெலத் நாடுகளின் தலைவர் பதவி சுழற்ச்சி முறையில் மாற்றப்படுவது வழக்கம். அதன் தற்போதைய தலைவராக இந்திய இனத்தவரான கமலேஷ் ஷர்மா அவர்களே உள்ளார். அவரது மின்னஞ்சலுக்கு(asksharma@commonwealth.int ) ஆயிரக்கணக்கான ஈமெயில்களை தமிழர்களும் மற்றும் வேற்றின மக்களும் அனுப்பவேண்டும் என்று காலம் மக் ரே அவர்கள் தனது டிவீட்டர் ஊடாகத் தெரிவித்துள்ளார். அதற்கான முகவரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன் நிலையில் நாளை லண்டனில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பெரும் சர்ச்சை கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா போன்ற நாடுகள் இலங்கையில் காமன்வெலத் மாநாட்டை நடத்த இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் பிரித்தானியா இன்னும் மெளனம் சாதித்து வருகிறது. இதனை கனடாவுடன் இணைந்து பிரித்தானியாவும் எதிர்க்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்க நாளை லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை சனல் 4 உட்பட சில சர்வதேச தொலைக்காட்சிகள் நேரடியா வீடியோ எடுத்து தனது செய்திகளில் இணைக்கவும் உள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
MORE INFO PLEASE CLICK HERE

ஈழ புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலருக்கு அமெரிக்காவில் புகலிடம் !
26 April, 2013 by admin
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலருக்கு அமெரிக்காவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்காலிகமாக அடைக்கலம் புகுந்திருந்தவர்களே இவ்வாறு அமெரிக்காவில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு மாத காலமாக குறித்த இலங்கையர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 44 பேர் குறித்த படகில் பயணம் செய்ததாகவும், நடுக் கடலில் தத்தளித்தவர்களை சிங்கப்பூர் கப்பலொன்று மீட்டு டுபாய் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களில் 11 பேர் தற்போது அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிற்கு சென்றுள்ளனர். இதேவேளை, இன்னமும் 19 புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியுள்ளனர். நாடு திரும்பினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Geen opmerkingen:
Een reactie posten