இதன்போது, சந்தேகநபர்களான மாணவர்களை விளக்கமறியலில் பிரத்தியேகமாக வைக்குமாறும் அவர்களுக்கு சிறைச்சாலை உணவுகளையே வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு வீடுகளில் சமைக்கும் உணவை அவர்களின் பெற்றோர் கொண்டுவந்து கொடுப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதனையடுத்து இவர்கள் கடுமையான குற்றத்தை புரிந்தவர்களாக கருதப்படுகிறார்கள், எனவே விளக்கமறியல் கைதிகளைப் போலவே இவர்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் பிரத்தியேக சலுகைகள் வழங்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
48 வயதான சிவகுரு ரகுவும், 41 வயதான அவரது மனைவி விப்ராவும் கடந்த 8ஆம் திகதி அவரது மகளின் கொலை திட்டமிடலுடன் அவரின் காதலனாலும் அவனது நண்பகர்கள் இருவராலும் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்ட ரகுவின்(அப்பாவின்) கண்கள் இரண்டும் தோண்டப்பட்டிருந்ததாக மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் தந்தையின் கண்களை தோண்டுமாறு காதலனிடம் தலக்ஷனா என்ற மாணவியே கோரியிருந்தார் என்றும், அதன் படிதான் தான் அவரின் கண்களை தோண்டியதாக அந்த மாணவியின் காதலன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார். எப்படி எல்லாம் நடக்கிறது பாருங்கள் !
Geen opmerkingen:
Een reactie posten