தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 april 2013

வெள்ளிக்கிழமை கூட்டம் இலங்கைக்கு வெடிவைக்குமா ?


வெள்ளிக்கிழமை கூட்டம் இலங்கைக்கு வெடிவைக்குமா ? 

வெள்ளிக்கிழமை லண்டனில் ஒரு கூட்டத்தொடர் நடக்கவுள்ளது என்ற செய்தி தமிழர்கள் மத்தியில் மிகக் குறைவாள அளவிலேயே பரவியுள்ளது. ஆனால் இதில் மறைந்து இருக்கும் விடையங்களோ பல ! இக் கூட்டம் முறையாக நடைபெற்றால் போதும், இலங்கைக்கு வெடிவைக்கும் நிகழ்வாகவே இது கருதப்படும். காரணம் என்னவென்றால் இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாடு குறித்து சில முக்கியமான விடையங்கள் இங்குதான் தீர்மானிக்கப்படவுள்ளது. மாநாட்டை எப்படி நடத்துவது, அது எவ்வாறு நடக்கும் என்று விவாதிக்க வழமையாக இப்படி ஒரு கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இம் முறை இந்தக் கூட்டம் அப்படி நடக்காது போல இருக்கிறது. இலங்கையில் மாநாட்டை எப்படி நடத்துவது என்ற ஆராய கூட்டப்படும் இக் கூட்டத்தில், இலங்கையில் இம் மாநாட்டை நடத்தவே கூடாது என்று 3 உலக நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளர்கள்.

தெள்ளத் தெளிவாகச் சொல்லப்போனால், இலங்கையில் நடைபெறவுள்ள 2013ம் ஆண்டிற்க்கான காமன்வெலத் மாநாட்டை அங்கே நடத்தாமல் வேறு நாடு ஒன்றுக்கு மாற்றுமாறு வெள்ளிக்கிழமை 3 நாடுகள் கோரிக்கை விடுக்கவுள்ளது. குறிப்பிட்ட இம் மூன்று நாடுகளும் சக்திவாய்ந்த நாடுகள் என்று கூறப்படுகிறது. இதனால் இக் கூட்டத்தில் பாரிய பிரச்சனைகள் எழலாம் என்று கூறப்படுகிறது. இதேவேளை இம் மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இருப்பினும் தனது முடிவை அவர் அடுத்தவாரம் வெளியிடுவார் என கான்சர்வேட்டிவ் கட்சிக்கு நெருக்கமானவர்கள் சிலர் அதிர்வுக்கு தெரிவித்துள்ளார்கள். தற்போதைய நிலையின் பிரகாரம் 3 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன ஆகும் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது !

இலங்கையில் இந்த மாநாட்டை நடத்தக்கூடாது என்றும், இம் முடிவையே இக் கூட்டத்தில் எடுக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவும் வெள்ளிக்கிழமை(26.04.20133) அன்று பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு, இலங்கையில் காமன்வெலத் மாநாடு நடக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தவேண்டும். அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தை வரவேற்ற பிரித்தானிய அரசு, இந்த காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாடு தொடர்பாக வாயே திறக்கவில்லை. இது பெரும் அதிர்ச்சியை தரும் விடையமாக அமைந்துள்ளது. ஏன் எனில் 4 லட்சம் தமிழர்கள் வசிக்கும் பிரித்தானியாவில், அவ்வப்போது வாக்குகளைப் பெறமட்டும் தமிழர்கள் பக்கம் தலைகாட்டும் சில அரசியல்வாதிகள், காமன்வெலத் மாநாடு குறித்து சர்வ மெளனம் காத்து வருகிறார்கள் ! எனவே தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இம் மாநாட்டிற்கு நாங்களும் எதிர்வு என்பதனைக் காட்டவேண்டும். எனவே தான் அவர்களும் சரியான முடிவை எடுப்பார்கள்.

வெள்ளிகிழமை போராட்டம் நடைபெறும் இடம்: மற்றும் நேரம் :

Commonwealth Secretariat
Marlborough House,
PallMall, 
London SW1Y 5HX,

TIME : 11AM TILL 3.00 PM

Geen opmerkingen:

Een reactie posten