தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 april 2013

முன் எச்சரிக்கை கொடுக்காமல் தென்கொரியா மீது தாக்குவோம்: வடகொரியா மிரட்டல்!

வட கொரியா என்ற தனி நாட்டை உருவாக்கிய கிம் இ சுங்-கின் பிறந்த நாள் நேற்று அந்நாட்டின் தலைநகர் பியாங் யாங்-கில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.அதே வேளையில், வடகொரியாவின் போர் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென் கொரியா தலைநகர் சியோலில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது.  இது, வட கொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. வட கொரியா அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த கோபத்தின் கனல் வெளிப்பட்டது.

”தென் கொரியாவில் உள்ள பொம்மலாட்ட அதிகார வர்க்கத்தின் சார்பில் எங்களை எதிர்த்து நேற்று நடத்தப்பட்ட பேரணி கண்டிக்கத்தக்கது. இந்த நேரத்தில் இருந்து, எவ்வித முன் எச்சரிக்கையும் விடுக்காமல், தென் கொரியா மீது எப்போது வேண்டுமானாலும் வட கொரியா அதிரடியாக தாக்குதல் நடத்தும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சித்து வரும் வேளையில் வட கொரியாவின் இந்த அறிவிப்பு போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
http://world.lankasri.com/view.php?224MC303lOo4e2BnBcb280Cdd208Ybc3nBze43Olx022WAK2

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும் அமெரிக்கா
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 07:11.53 மு.ப GMT ]
வடகொரியாவின் போர் பிரகடனத்தை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகின்றது.
எனவே, இப்போர் பதட்டத்தை தணிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அதற்காக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஆசிய நாடுகளான தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு சென்று தலைவர்களை சந்தித்து போர் பதட்டத்தை தணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மேலும் ஜப்பான் சென்ற அவர், அந்நாட்டு பிரதமர் ஷின்ஷோ அபே மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், அமெரிக்கா திரும்பும் வேளையில் ஜான்கெர்ரி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘வடகொரியாவுடன் அதிகாரப்பூர்வமான நம்பகத்தன்மை வாய்ந்த திறந்த மனதுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு வடகொரியா இன்னும் பதில் தெரிவிக்கவில்லை. மவுனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten