தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 april 2013

நுவரெலியா - அக்கரப்பத்தனை பகுதியில் ஆணின் சடலம் !


நுவரெலியா - அக்கரப்பத்தனை - மன்ராசி தோட்ட தேயிலை மலையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இச்சடலம் இன்று (15) காலை மீட்கப்பட்டதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். மன்ராசி - சின்ன நாகவத்தையைச் சேர்ந்த 68 வயது மதிக்கத்தக்க நாகலிங்கம் என்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேற்படி நபர் நேற்று (14) சின்ன நாகவத்தையில் இருந்து மன்ராசி நகருக்கு வந்துள்ளார். எனினும் அவர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன தந்தையை மகன் உள்ளிட்ட அவரது உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில் மன்ராசி தோட்ட தேயிலை மலையில் உள்ள கிணற்றில் இருந்து நாகலிங்கம் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நாகலிங்கத்தின் செருப்பு அவரது சடலம் இருக்கும் இடத்தில் இருந்து 20 அடி தூரத்தில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.அத்துடன் சடலம் இருந்து இடத்திற்கு செல்லும் வழியில் தேயிலை செடிகள் உடைந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுத்துள்ளது. சம்பவம் குறித்து அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து தற்சமயம் சடலத்தை நுவரெலியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten