தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 april 2013

வரி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்: வாசுதேவ நாணயக்கார (செய்தித்துளிகள்) !


வரி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வரி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,
அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இம்முறை மே தினக் கூட்டத்தில் வரி வருமானம் அதிகரிப்பது குறித்து யோசனைகளை வலியுறுத்தப்படும்.
கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையில் வரி வருமானத்தை அறவீடு செய்ய முடியும்.
நாட்டில் பல்வேறு விதமான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்றன,
இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களின் போது ஒரு வீத வரியை அறவீடு செய்ய முடியும் என்பதே எமது பரிந்துரை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3 மாதங்களில் எயிட்ஸ் காரணாமக 9 பேர் பலி
இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் எச்.ஜ.வி தொற்றுக்கு இலக்கான 9 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை தேசிய எயிட்ஸ் ஒழிப்பு நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது
எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 44 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் எச்.ஐ.வீ பாதிப்புக்கு உள்ளான 646 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten