தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 april 2013

அரசியலிலிருந்து விலகுகிறாரா சோனியா காந்தி?


அரசியலிலிருந்து விலகுகிறாரா சோனியா காந்தி?

தனது வாரிசுகளை அரசியல் களத்தில் ஈடுபடுத்துவதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அரசியலிலிருந்து விலகுவார் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
இது தொடர்பில் இந்திய செய்திகள் வெளியிட்டுள்ள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜனவரி மாதம் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது, ராகுல்காந்திக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரியங்காவையும் அரசியலுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை சோனியா தற்போது தீவிரப்படுத்தி உள்ளார். சோனியாவின் திடீர் உடல் நலக் குறைவு பிரியங்காவை, அரசியலில் குதிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்பட்சத்தில் ராகுல், பிரியங்கா இருவரிடமும் ஆட்சி பொறுப்பையும், கட்சி பொறுப்பையும் சோனியா ஒப்படைத்து விட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவார் என்று கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட் சோனியா காந்தி 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது உடல்நிலையும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப் படுகிறது. மேலும் ரேபரலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடலாம் என்றும் கூறப் படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten