[ நக்கீரன் ]
ராஜபக்சேவுக்கு இந்திய அரசு ஆதரவா இருப்பதால்தான், போர்க்குற்றங்களிலிருந்தும் இனப்படுகொலையிலிருந்தும் அவர் தப்பிச்சிக்கிட்டிருப்பதாக தமிழர்கள் குமுறுகின்றார்களே..!
ராஜபக்சேவை இந்தியா நம்பவில்லை என்பதும், அவரின் ஆட்சியைக் கலைக்க இந்திய அரசு ரகசிய வேலைகளைப் பார்த்துக்கிடண்டு இருப்பதும் லேட்டஸ்ட் தகவல். விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளராகவும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இருந்தவருமான ஆனந்தசங்கரி போன வாரம் சென்னைக்கு வந்தப்ப, இங்கிருக்கிறவங்ககிட்டே பேசுனப்பதான் இந்த செய்திகளை சொல்லியிருக்கிறார்.''
புதுசாகவும் ஆச்சரியமாகவும் இருக்குதே. ஆனந்த சங்கரி வேற என்னென்ன சொன்னாராம்?''
"இலங்கையை ஆட்சி செய்யும் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அவருடைய தம்பிகளான கோத்தபாய, பசில் இருவரையும் மீறி யாரும் எதுவும் செய்துவிடமுடியாது. சர்வமும் ராஜபக்சே குடும்பமயம்தான். இதைப் பொறுக்க முடியாத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுமார் 25 எம்.பி.க்கள், ராஜபக்சே வகையறாவுக்கு எதிராக அணிதிரள, அவர்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்ருக்கிறார்.''
ரணில்கூட சமீபத்தில் டெல்லிக்கு வந்துட்டுப் போனாரே?''
எல்லாத்துக்கும் லிங்க் இருக்குதாம். ராஜபக்சே முழுக்க முழுக்க சீனா கட்டுப்பாட்டுக்குள்ளே போறது இந்தியாவுக்குப் பிடிக்கல. அதனால "ரா' மூலமா ராஜபக்சேவைக் கவிழ்க்க, டெல்லியில் கூர்சீவப்பட்ட ரணில், லண்டனில் உள்ள மாலினி, கொழும்பில் சந்திரிகான்னு மும்முனை ஆபரேஷனை மேற்கொண்டது. இது கிட்டத்தட்ட சக்ஸஸ் நிலைக்கு வந்தப்ப, சீன உளவுத்துறை இதை ஸ்மெல் பண்ணி ராஜபக்சேவுக்கு போட்டுக்கொடுத்திடிச்சாம்.''
""அப்புறம்?''
"முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு பாதுகாப்பு கொடுத்த இலங்கை ராணுவத்தினர் மூலமே அவரை வெள்ளைவானில் கடத்திட்டாரு கோத்தபாய. இரண்டு நாள் சந்திரிகாவைக் காணாமல் சந்திரிகாவோட உறவினர்கள் பதறிப்போய் ராஜபக்சே கிட்டே முறையிட, அவர் பி.எஸ். வீரப்பா பாணியில் சிரிச்சிக்கிட்டே, சந்திரிகாவின் ரகசிய வேலைகளை புட்டு புட்டு வச்சிருக்காரு. அப்புறம், கோத்தபாயவுக்கு மகிந்த ராஜபக்சே போன்போட, அந்த போனிலேயே சந்திரிகாவோட உறவினர்களுக்கு எச்சரிக்கை விட்ட கோத்தபாய, ஒழுங்கா சந்திரிகாவை நாட்டை விட்டு ஓடச்சொல்லுங்க. இல்லைன்னா, கதையை முடிச்சிட்டு புலிகள் மேலே பழியைப் போட்டுடுவோம்னு சொல்ல, இப்ப சந்திரிகா இலங்கையில் இல்லை.''
""இதற்குப் பின்னணியில் இருந்த இந்தியா மேலேயும் ராஜபக்சே அரசு செம கடுப்பா இருக்குமே?''
""அந்தக் கடுப்பில்தான் இந்தியாவுக்கு எதிரா கோத்தபாயகிட்டேயிருந்து அறிக்கை வந்தது. சந்திரிகா, ரணில், ரா மூன்றுமேலேயும் ராஜபக்சே செம காட்டமா இருக்கிறதால, அவர் கட்சியில் உள்ள அதிருப்தி எம்.பிக்கள் மரணபீதியில் இருக்காங்க. எப்படியாவது கட்சியை உடைத்து, ராஜபக்சேவின் கையைப் பலவீனப்படுத்தினால்தான் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்க முடியும்ங்கிற நிலையிலே இருக்காங்க. இந்திய அரசும் அமெரிக்காவும் சேர்ந்து ராஜபக்சேவுக்கு விரைவில் முடிவு கட்டுவாங்கன்னு சென்னைக்கு வந்த ஆனந்த சங்கரி விவரமா சொல்லியிருக்காரு.''
""இந்திய அரசு என்ன செய்யப் போகுதுங்கிற எதிர்பார்ப்பும் இருக்குமே?''
""அதைவிட, ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்றுபேரோட மரண தண்டனை விஷயத்தில் இந்திய அரசு என்ன செய்யப்போகுதுங்கிற பதட்டமான எதிர்பார்ப்புதான் தமிழர்கள் மனதில் இருக்குது. ம.தி. மு.க.வோட உயர்நிலை செயல்திட்டக்குழுவில் பேசிய வைகோ, ஜெ.வின் கையில்தான் இந்த மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்தாக்கும் பரிந்துரைகளை அளிக்கும் அதிகாரம் இருக்குது. அவருக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் நம்ம பிரச்சாரம் இருக்கணும்னு வைகோ சொல்லியிருக்காரு.''
கச்சத்தீவு! டெசோ முடிவு!
டெசோவின் அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்து கலைஞர் தலைமையில் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், "இலங்கை கடற்படையினரால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது தடுக்கப்பட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாமா?' என்று கலைஞர் கேட்க, "தற்போதுள்ள சூழலில் இதுபோன்ற சட்ட நடவடிக்கை அவசியமானது' என்று கி.வீரமணி, திருமா, சுப.வீ. உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆமோதித்தனர்.
மேலும், இதற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல டெசோ சார்பில் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்கிற ஆலோசனையை முன்வைத்த னர். இதனை கலைஞர் ஏற்றுக் கொள்ள, அந்தப் பொதுக்கூட் டத்தை எங்கு, எப்பொழுது நடத்தலாம் என விவாதித்ததில் சென்னை திருவான்மியூரில் வரும் 24-ந்தேதி நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லலாமா? என்று உறுப்பினர்கள் கேட்க, "தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் நடக்கவிருப்பதால் உடனடியாக கூட்ட ஏற்பாடுகளை செய்வதில் சிரமம் இருக்கும் என கலைஞர் விவரிக்க, அந்த யோசனை தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காரைக்கால் மீனவர்கள் 26 பேரை உடனடியாக மீட்க, மத்திய அரசை வலியுறுத்துவது என ஆலோசித்தனர்.
இந்த விவாதங்களின் அடிப்படையில் கச்சத்தீவை ரத்து செய்ய வழக்கு, மீனவர்களை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்துவது, இதற்காக பொதுக்கூட்டம் நடத்துவது என்கிற தீர்மானங்களை நிறைவேற்றினார் கலைஞர்.
Geen opmerkingen:
Een reactie posten