[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 04:10.35 PM GMT ]
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் கடவுச்சீட்டை முடக்குமாறு விடுத்த கோரிக்கை தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ளுராட்சிமன்றங்களை பொறுப்பேற்றுள்ள செயலாளர்கள், அரசியல் கட்சிகளுக்கு அடிபணியாமல் மக்களின் தேவைகளை கருத்தில்கொண்டு சேவையாற்ற முன்வரவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
சிராணி பண்டாரநாயக்க தமது பிரச்சினைகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்துவதனை தடுப்பதற்காகவே இவ்வாறு கடவுச் சீட்டு முடக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சர்வதேச சமூகத்தினரை சந்திக்க தனக்கும் இவ்வாறு அனுமதியளிக்கப்படவில்லை என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு அடிபணியாமல் மக்களின் தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும்: விநாயகமூர்த்தி முரளிதரன்
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 05:22.10 PM GMT ]
மட்டக்களப்பில் உள்ளுராட்சிமன்றங்களை பொறுப்பேற்றுள்ள செயலாளர்கள், அரசியல் கட்சிகளுக்கு அடிபணியாமல் மக்களின் தேவைகளை கருத்தில்கொண்டு சேவையாற்ற முன்வரவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
உள்ளுராட்சிசபைகளின் செயலாளர்களை சந்தித்து மேற்கொண்ட கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சிகளின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக கொண்டுசெல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகரசபை உட்பட 9 உள்ளுராட்சி சபைகளின் ஆட்சிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் அவற்றின் அதிகாரங்கள் உள்ளுராட்சி செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் அவற்றின் பயன்பாடுகள் முழுமையாக மக்களைச்சென்றடையவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
இதன் பிரகாரம் இந்த ஆண்டு உள்ளுராட்சி சபைகள் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள்,எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு உதவி உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கைகளில் இருந்த பிரதேசசபைகள், மாநகரசபை என்பனவற்றின் அதிகாரம் அதிகாரிகளாகிய உங்களின் கைகளில் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முன்வரவேண்டும்.
கடந்த காலத்தில் உள்ளுராட்சி சபைகள் ஊடாக அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படும்போது கட்சி சார்ந்து சில நடவடிக்கைகள் இடம்பெற்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளரோ, அந்த கட்சி சார்ந்த ஒருவரோ இருந்தால் அந்த வீதியை போடுவதை தவிர்த்தனர்.
இவ்வாறான நடைமுறைகளை நீங்கள் மேற்கொள்ளக்கூடாது. அபிவிருத்தியானது அனைவரையும் சென்றடைய வேண்டும். கட்சிகளுக்கு அப்பால் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் காரணங்களை மக்களின் அபிவிருத்திப்பணியில் காட்டக்கூடாது.
கடந்த காலத்தைபோல் அல்லாமல் அதிகாரிகள் நீங்கள் சிறந்தமுறையில் செயற்படவேண்டும். உங்களுக்கு சில மிரட்டல்கள் விடுத்ததாகவும் எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நீங்கள் அவை தொடர்பில் அஞ்சவேண்டிய அவசியமில்லை. உங்கள் பணியை நீங்கள் சிறந்தமுறையில் செய்யுங்கள்.
அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இவற்றினை ஒளியூட்டுவதற்கான நடவடிக்கையினை மாநகசபை மேற்கொள்ளவேண்டும். அதிக வருமானமீட்டும் மாநகரசபையாகவுள்ள நிலையில் அவற்றினை திறம்படச் செய்ய வேண்டும்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அற்ற பிரதேசசபைகள், மாநகரசபை ஆகியவற்றின் செயலாளர்கள்,ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் சத்தியானந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் பொஸ்டனில் வெடித்த குண்டுகள், விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஒப்பானது: சவீந்திர சில்வா
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 05:37.43 PM GMT ]
அமெரிக்காவின் பொஸ்டனில் வெடித்த குண்டுகள், விடுதலைப் புலிகளின் பாணியை ஒத்ததென மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுகள் 1980களின் தொடக்கத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகளுக்கு ஒப்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவராக உள்ள அவர், பொஸ்டனில் வெடித்த குண்டுகள் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில்,
“பொஸ்டன் குண்டுத் தாக்குதலுக்கு நேரக்கணிப்புடன் கூடிய, கரிமருந்து துகள், ஆணிகள், சிறிய இரும்புக் குண்டுகளை உள்ளடக்கிய இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
ஈழப்போரின் போது, 1980களின் தொடக்கத்தில் விடுதலைப் புலிகள், நட்டுகள், போல்ட்களை உள்ளடக்கிய இத்தகைய வெடிகுண்டுகளை பயன்படுத்தியிருந்தனர்.
பொஸ்டன் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஊடக அறிக்கைகள், விடுதலைப் புலிகளாலும், சிறிலங்கா இராணுவத்துடன் போரிட்ட ஏனைய பல தீவிரவாத குழுக்களாலும், ஆரம்ப காலத்தில் தயாரிக்கப்பட்ட குண்டுகளைத் தான் நினைவுபடுத்துகின்றன.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், விடுதலைப் புலிகள் துல்லியமான தொழில்நுட்பத்தை கொண்டிருந்தனர்.
மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் கருவிகளால் மூன்று பத்தாண்டுகளில் நாம் பயங்கரமான அனுபவங்களை பெற்றிருக்கிறோம்.
சிறிலங்கா படையினருக்கும் பொதுமக்களுக்கும் அதிகளவு சேதங்களை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் பெருமளவில் போல்ட் மற்றும் நட்டுகளை, தமது குண்டுகளில் பயன்படுத்தினர்.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்த பரிசோதனைகள், இப்போதைய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உதவ முடியும்.
பொஸ்டன் மரதன் போட்டியின் முடிவிடத்தில் வைக்கப்பட்டிருந்த, ஆணிகள், போல் பெயாரிங்குகள் நிரப்பிய பிரசர் குக்கரே வெடிக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளால் பிரசர் குக்கர்கள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படவில்லை.
ஆனால், குண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகள் விடுதலைப் புலிகளாலும் பயன்படுத்தப்பட்டவை என சவீந்திர சில்வா மேலும் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten