தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 april 2013

போருக்குப் பின்னர் வடக்கில் 19 ஆயிரத்து 420 சிறுவர்கள் அவயவங்களை இழந்துள்ளனர்!


கடந்த 2009ம் ஆண்டு மே 19ம் திகதிக்குப் பின்னர் வடபகுதியில் 19 ஆயிரத்து 420 சிறுவர்கள் அவயவங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பதிவுகளுக்கமைய கண், காது, மூக்கு மற்றும் கை, கால் போன்ற அவயவங்களை இழந்து 19,420 சிறுவர்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 7ஆயிரத்து 410 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 336 சிறுவர்களும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து  674 சிறுவர்களும் பாதிப்படைந்து வசித்து வருகின்றமை தெரியவந்துள்ளது.
எனினும் இச்சிறுவர்களுக்கு இதுவரையான காலப்பகுதியில் எந்தவொரு அரச, சர்வதேச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளும் கிடைக்கவில்லை என வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் த. நடனேந்திரன் கவலை வெளியிட்டள்ளார்.
இது விடயம் தொடர்பாக தாம் இரண்டு மாதங்களுக்கு மன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும், ஐநா முகவராண்மை நிறுவனங்களுக்கும் கடிதங்களை அனுப்பி பாதிப்படைமந்துள்ள சிறுவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு கோரியதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இதுவரை இச்சிறுவர்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் இடம்பெற்றதாகத் தகவலில்லை.
பாதிக்கப்பட்ட இச்சிறுவர்கள் எந்தவொரு உதவிகளும் கிடைக்காத நிலையில் வீடுகளுக்குள் சொல்லொணாத் துன்பங்களுடன் முடங்கியிருப்பது அனைவரும் அறிந்த வேதனைக்குரிய விடயமாகும்.
எனவே இச்சிறுவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அரச, சர்வதேச, அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் உடனடியாக உதவ முன்வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார் நடனேந்திரன்.

Geen opmerkingen:

Een reactie posten