காமன்வெலத் நாடுகளின் தலைவர் பதவி சுழற்ச்சி முறையில் மாற்றப்படுவது வழக்கம். அதன் தற்போதைய தலைவராக இந்திய இனத்தவரான கமலேஷ் ஷர்மா அவர்களே உள்ளார். அவரது மின்னஞ்சலுக்கு(asksharma@commonwealth.int ) ஆயிரக்கணக்கான ஈமெயில்களை தமிழர்களும் மற்றும் வேற்றின மக்களும் அனுப்பவேண்டும் என்று காலம் மக் ரே அவர்கள் தனது டிவீட்டர் ஊடாகத் தெரிவித்துள்ளார். அதற்கான முகவரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன் நிலையில் நாளை லண்டனில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பெரும் சர்ச்சை கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா போன்ற நாடுகள் இலங்கையில் காமன்வெலத் மாநாட்டை நடத்த இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் பிரித்தானியா இன்னும் மெளனம் சாதித்து வருகிறது. இதனை கனடாவுடன் இணைந்து பிரித்தானியாவும் எதிர்க்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்க நாளை லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை சனல் 4 உட்பட சில சர்வதேச தொலைக்காட்சிகள் நேரடியா வீடியோ எடுத்து தனது செய்திகளில் இணைக்கவும் உள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten