[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 11:33.39 AM GMT ]
இந்தியக் கடற்படையின் 'ஐஎன்எஸ் சுஜாதா' என்று போர்க்கப்பலும், 'ஐஎன்எஸ் தரங்கினி' என்ற பாய்மரப் பயணப் பயிற்சிக் கப்பலும், இந்தியக் கடலோரக் காவல்படையின் 'வருண' என்ற ரோந்துக் கப்பலுமே இவ்வாறு நேற்றிரவு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்தக் கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்தியக் கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான, 'ஐஎன்எஸ் சுஜாதா', 101 .1 மீற்றர் நீளமும் 1890 தொன் எடையும் கொண்டது. இதில் 192 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.
'ஐஎன்எஸ் தரங்கினி' என்ற 54 மீற்றர் நீளமும் 420 தொன் எடையும் கொண்ட பாய்மரப் பயணப் பயிற்சிக் கப்பலில் 80 இந்தியக் கடற்படையினர் பணிபுரிகின்றனர்.
இந்தியக் கடலோரக் காவல்படையின் 'வருண' என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் 187 கடலோரக் காவல் படையினர் பணியாற்றுகின்றனர். இதன் நீளம் 74 மீற்றர்களாகும். 1247 தொன் எடை கொண்டது.
சுஜாதா மற்றும் வருண ஆகிய கப்பல்களில் தலா ஒரு 'செரெக்' ரக உலங்கு வானூர்திகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
எதிர்வரும் 21ம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள இந்தியக் கப்பல்கள், இலங்கை கடற்படையினருடன் இணைந்து சிறப்புப் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்கவுள்ளன.
இலங்கை அகதிகளை ஏற்றிய மற்றுமொரு படகு கண்டுபிடிப்பு
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 02:58.10 PM GMT ]
இந்த நிலையில குறித்த கப்பலை தேடும் பணிகளை அவுஸ்திரேலியாவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் நேற்றைய தினம் 78 அகதிகளுடன் பிடிபட்ட அகதிகள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
பாரிய அகதிகள் படகொன்று அவுஸ்திரேலியாவில் தஞ்சம்
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 05:55.25 AM GMT ]
இந்தப் படகில் 153 அகதிகள் பயணித்துள்ளதாகவும், குறித்த படகு அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதிகளவான அகதிக் கோரிக்கையாளர்கள் ஒரே தடவையில் கிறிஸ்மஸ் தீவில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டகில் மூன்று படகோட்டிகளும், நூற்றைம்பது அகதிகளும் பயணித்துள்ளனர்.
அகதிகள் கிறிஸ்மஸ் தீவி;ற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அகதிப் படகில் பயணித்தவர்கள் இலங்கையர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தத் தகவல்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten