தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 april 2013

இலங்கை கடற்படையினருக்கு, இந்தியா பயிற்சி வழங்கக் கூடாது: இந்திய மாநில வெளிவிகார அமைச்சர்


வட மாகாண மக்களுக்கு தேர்தல்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட உள்ளது: பெபரல்
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 02:12.00 AM GMT ]
வடமாகாண வாக்காளர்களை தேர்தல்கள் குறித்து தெளிவுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பெப்ரல் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு வாக்களார்களுக்கு தற்போதும் தேர்தல் விளக்கமளிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
வடமாகணத்தை முழுமையாக உள்ளடக்கும் வகையில் தமது அமைப்பு தெளிவூட்டல்களை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 20 வருடங்களின் பின்னர் அங்கு தேசிய தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், மக்களை வாக்களிப்பு முறைகள் குறித்து தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இலங்கை கடற்படையினருக்கு, இந்தியா பயிற்சி வழங்கக் கூடாது: இந்திய மாநில வெளிவிகார அமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 02:49.35 AM GMT ]
தமிழக மீனவர்களுக்கு எதிரான வன்முகைளை நடத்தும் வகையில் இலங்கை கடற்படையினருக்கு, இந்திய கடற்படையினர் பயிற்சி வழங்க கூடாது என்று இந்திய மாநில வெளிவிகார அமைச்சர் ஈ.அஹமட் தெரிவித்துள்ளார்.
நேற்று ராஜ்யசபாவில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் இந்த வருடத்தின் மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 125 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக அவர்களின் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் இது தொடர்பில் மத்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதாக தெரியவில்லை.
மாறாக தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்ற இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி வழங்கி வருகிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten