தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

ஈ.பி.டி.பியின் பா.உறுப்பினர் விளையாட்டு நிகழ்விற்கு அழைப்பு!- எதிர்த்த யாழ்.மாநகர சபை பணியாளர்கள் 10 பேர் பணி நீக்கம்!


36 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 02:07.34 AM GMT ]
பயங்கரவாத நடவடிக்கைகள், போலி காணி உறுதி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்கள் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சட்டத்தரணி எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பணம் திரட்டியவர்கள், செலிங்கோ குழும நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொதலாவலவின் மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஈ.பி.டி.பியின் பா.உறுப்பினர் விளையாட்டு நிகழ்விற்கு அழைப்பு!- எதிர்த்த யாழ்.மாநகர சபை பணியாளர்கள் 10 பேர் பணி நீக்கம்
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 03:22.58 AM GMT ]
விளையாட்டு நிகழ்விற்காக ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்தரி அலன்ரினை அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த யாழ்.மாநகர சபையின் 10 பணியாளர்கள் ஈ.பி.டி.பியினரால் பழிவாங்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் யாழ்.கோண்டாவில் நாரயணா சனசமூக நிலையத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்விற்கு ஈ.பி.டி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்தரி அலன்ரினை அழைத்தமைக்கு சனசமூக நிலைய நிர்வாத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் 10 பேர் மாநகர சபையில் பணியாற்றுகின்றனர்.
இதன் பின்னர் இவர்கள் மாநகர சபைக்கு பணிக்கு சென்ற போது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செயற்படுதவதாகக் கூறியே பழிவாங்கும் நடவடிக்கையாக இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten