பிரிட்டனில் சிங்களவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பிரிட்டன் தமிழர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்களவர் என்ற காரணத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடத்திய இரண்டு தமிழர்களுக்கும் ஏழு மற்றும் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வெம்பிளி நகரில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 12ம் திகதி இந்த தாக்குதல் இடம்பெற்றது.
சம்பவத்தில் கைதான எஞ்சலோ லாசரஸ் மற்றும் சேதுலிங்கம் சின்னவேகம் ஆகியோரின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
மிக மோசமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தாக்குதல் நடத்தியமை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த இருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten