[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 12:18.32 AM GMT ]
இராணுவம் பொதுமக்களை கொடுமைப்படுத்தவில்லை என்பதை முழு உலக நாடுகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பும் பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கிளிநொச்சியின் ஐந்தாவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் அஜித் பி. விக்ரமசேகர தெரிவித்தார்.
எல்.ரி.ரி.ஈ.யின் தலைமையகமாக இருந்து வந்த கிளிநொச்சியில், இடம்பெயர்ந்த மக்களுக்கென இராணுவம் நாளாந்தம் செய்யும் பணிகள் பற்றிய ஆதாரபூர்வமான விபரங்கள் இதன் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
உலகெங்கிலும் இருக்கும் அரசியல் வாதிகள், அரசாங்கத் தலைவர்கள், கல்விமான்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், நீதிபதிகள் உட்பட முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக தினமும் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
http://news.lankasri.com/show-RUmryERVNajt4.html
யாழ். கடற்கரைப் பூங்காவில் இளைஞன் மீது இராணுவச் சிப்பாய் தாக்க முயற்சி!
குறித்த பூங்காவிற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த இரு இளைஞர்கள், தங்கள் மோட்டார் சைக்கிளை கடற்கரைப் பூங்கா பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள இருக்கையில் அமர்ந்திருந்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியால் வந்த இராணுவச்சிப்பாய் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள்களில் இருந்த தலைக்கவசங்களையும் எடுத்துச் சென்றுள்ளார்.
இதனை அவதானித்த இளைஞன் குறித்த தலைக்கசவங்கள் தங்களுடையது என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், அதனை கொடுப்பதற்கு மறுத்த இராணுவச்சிப்பாய், வாகனம் நிறுத்துவதற்கு தடைச்செய்யப்பட்ட இடத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ளதால் தலைக்கவசத்தை தரமுடியாது என்று கூறியதுடன் இளைஞரைத் தாக்கவும் முற்பட்டுள்ளார்.
இருவருக்கிடையிலும் வாக்குவாதம் எற்பட்டதையடுத்து, அப்பகுதியில் பகுதியில் பெருமளவான மக்கள் கூடிவிட்டனர். இதனை அவதானித்த படைச்சிப்பாய் தலைக்கவசத்தை கொடுத்து விட்டு அருகில் உள்ள இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளார்.
இச்சம்பவத்தினால் குறித்த பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten