குண்டுதாரி இங்கு தான் ஒளிந்தார் திடுக்கிடும் படங்கள் !
பொஸ்டன் குண்டுதாரிகள் இருவரில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார். அவருடைய இளைய சகோதரர் பொலிசாரின் பிடியில் இருந்து தப்பியோடினார். இதனையடுத்து பொஸ்டன் மாநகரில் உள்ள வாட்டர் டவுன் என்னும் இடத்தை பொலிசார் முற்றுகையிட்டனர். அங்குதான் அவர் எங்கோ மறைந்து இருக்கிறார் எனப் பொலிசார் தெரிவித்தார்கள். இதனையடுத்து நடந்த பாரிய தேடுதல் வேட்டையில் 19 வயதான சந்தேக நபர், ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்த படகு ஒன்றுக்குள் ஏறி அங்கே ஒளிந்துகொண்டார். அவர் நினைத்திருக்க முடியும் தன்னை எவரால் கண்டுபிடிக்க முடியும் என்று. ஆனால் அமெரிக்காவின் அதி நவீன ஹெலிகொப்டர்கள், இத்தேடுதல் வேட்டையில் பயன்படுத்தப்பட்டன.
இதில் உள்ள வெப்பத்தை உணரும் கருவிகள், சந்தேக நபர் ஒளிந்துள்ள இடத்தை துல்லியமாக காட்டிக்கொடுத்துவிட்டது. ஏற்கனவே காயமடைந்து அப் படகினுள் ஒளிந்திருந்த நபரை மிகவும் துல்லியமாக அறிந்த பொலிசார், ரோபோ கைகள் பொருத்தப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் ஒன்றை அனுப்பி, படகின் மீது போர்க்கப்பட்ட துணியை முதலில் கிழித்துள்ளார்கள். பின்னர் மனிதரை சில நிமிடங்கள் மூச்சை இழக்கவைக்கும் சிறிய ரக குண்டு ஒன்றை வெடிக்கவைத்து, சந்தேக நபரை மயக்கமடையச் செய்யத பின்னர் அவரை கைதுசெய்துள்ளார்கள். இந்த அனைத்து நடவடிக்கையும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
காணொளியை முழுமையாகப் பாருங்கள்.
Geen opmerkingen:
Een reactie posten