[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 08:16.55 AM GMT ]
சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழரின் பாரம்பரிய பிரதேசமான மணலாற்றில், சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பொதுக்கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்கள் விறுவிறுப்படைந்து வருவதன் தொடர்சியாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடுகளில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (21-04-2013) இடம்பெறுகின்றன.
ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுகின்ற விமர்சனங்களுக்கு அஞ்சாமல் மக்களுக்கு நேர்மையாக சேவையாற்ற வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெலிஓயா விளையாட்டு மைத்தானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,
‘வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் வரும் செப்ரெம்பர் மாதம் நடத்தப்படும்.
எனது சோதிடர் வெற்றி பெறுவதற்கு உகந்த நல்ல நேரத்தைக் குறித்துக் கொடுத்துள்ளார்.
அவர் கூறிய ஆலோசனையின் படி தான், தேர்தல் நடத்தும் நாள் குறித்து முடிவெடுப்பேன்.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் - பிரித்தானியா : இன்று தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான மாபெரும் பொதுக்கூட்டங்கள் ! அணிதிரளுமாறு அழைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 09:25.54 AM GMT ]
தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பொதுக்கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்கள் விறுவிறுப்படைந்து வருவதன் தொடர்சியாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடுகளில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (21-04-2013) இடம்பெறுகின்றன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பணிகள் இடம்பெற்று வருவதோடு எதிர்வரும் மே-18ம் நாள் உலகத் தமிழர்களின் முரசறைவாக தமிழீழ சுதந்திரச சாசனம் முரசறையப்படவிருக்கின்றது.
இந்நிலையில் பிரித்தானியாவில் தென்மேற்கு லண்டன் பகுதிகளிலும் பிரான்சில் தமிழர்கள் ஓன்றுகூடுவதற்கு வசியான பாரிலஸ் லாச்சல் அண்டிய பகுதியிலும் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான பொதுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன.
இப்பொதுக்கூட்டங்களில் தமிழீழ சுதந்திர சாசனதிற்கான கையேடுகள் மற்றும் கேள்விக்கொத்துகள் பரிமாறப்பட இருப்பதோடு பல்வேறு கருத்துப்பரிமாற்றங்களும் அரசியல் கலந்துரையாடல்களும் இடம்பெறவிருக்கின்றன.
பிரதமர் வி.உருத்திரகுமாரனது உரையும் இணையவழி காணொளியூடாக இப்பொதுக்கூட்டங்களில் இடம்பெறுகின்றது.
பிரித்தானியா :
@2:00pm Croydon
Broadgreen community hall
229 -231 London Road
Croydon CR0 2RL
ENTRANCE VIA Summner Rd
@2:00pm Croydon
Broadgreen community hall
229 -231 London Road
Croydon CR0 2RL
ENTRANCE VIA Summner Rd
@6:30pm Tooting, Mitcham
NORTH Mitcham Association
51 Woodland Way
Mitcham, CR4 2DZ.
NORTH Mitcham Association
51 Woodland Way
Mitcham, CR4 2DZ.
பிரான்ஸ் :
50 Rue de Torcy
75018 Paris
Metro : Marx Dormoy/ Ligne:12
50 Rue de Torcy
75018 Paris
Metro : Marx Dormoy/ Ligne:12
நாளை மலர இருக்கும் தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்...
எமது குடும்பத்திலுள்ள அனைவரையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்!- ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 09:49.52 AM GMT ]
சாதகமான கண்ணோட்டத்துடன் செயற்பட்டால் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான இயலுமை தோன்றும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, விமர்சனங்கள் குறித்து அச்சமடையாமல் மனதுக்கு நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றுங்கள் என தெரிவித்தார்.
அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பிரதேச சபை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அநுராதபுரத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் கடந்த நேற்று முன்தினம் பிரதேச சபை உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
இணையத்தளங்களில் எம்மை கடுமையாக விமர்சிக்கின்றனர். குடும்பத்திலுள்ள அனைவரையும் விமர்சிக்கின்றனர். கோத்தபாய, பசிலை விமர்சிக்கின்றனர். அதோடு நின்றுவிடாது எமது பிள்ளைகள் மூவரையும் விமர்சிக்கின்றனர்.
இவ்வாறான விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்தாது மக்களுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன் என்றார் ஜனாதிபதி.
Geen opmerkingen:
Een reactie posten