சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் வெளியிட்டுள்ள கருத்துகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இன்னமும் உள்ள பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலுக்கு வலுச்சேர்க்கிறது என்று சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் அமெரிக்கத் தூதுவர் நிகழ்த்திய உரை குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில்,
“அமெரிக்கத் தூதுவர் போருக்குப் பிந்திய சூழலை அறியாதுள்ளார் அல்லது அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய அறியாதது போல இருக்கிறார்.
அரசியல் அதிகாரங்களைப் பகிர்வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவது முக்கியம் என்று அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் விளையாட்டு நடத்துகிறது என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும்.
2009ல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்ற உரிமையை மீளப் பெற்றது.
அதற்கு முன்னர், அவர்கள் உஎள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விடுதலைப் புலிகளின் ஊதுகுழலாகவே இருந்தனர்.
2001ல் தமிழ்மக்களின் ஒரு பிரதிநிதி என்று விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரபாகரன் நிர்ப்பந்தித்ததை ஒருவேளை தூதுவர் சிசன் இன்னமும் அறியாமல் இருந்திருக்கலாம்.
அதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நோர்வேயின் தலைமையிலான சமாதான முயற்சிகளில் இருந்து தந்திரமாக வெளியேற்றப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைபின் தலைவர்கள் உயிருக்குப் பயந்து இன்னமும் அமைதியாக உள்ளனர்.
கொழும்பிலுள்ள அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு இராஜதந்திர தூதரகமுமே, அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நிற்கவில்லை.
அவர்கள் குற்றச்சாட்டுகள் குறித்துப் பொறுப்புக்கூற வலியுறுத்துகின்ற போதிலும், மோதல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கு குறித்து அமைதி காக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் சிறுவர்களை ஆயுதமுனையில் தமது தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தியது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறைந்தபட்சம் தமது நிலைப்பாட்டையேனும் விபரிக்க வேண்டும்.
இன்று தமிழ் மக்களின் ஒரு தெரிவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே உள்ளது.
விடுதலைப் புலிகள் அமெரிக்காவிலும், பிரித்தானியாவிலும் இன்னமும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் உள்ள போதிலும், சுதந்திரமாகச் செயற்படும் விடுதலைப் புலிகளுடன் பல்வேறு மட்டங்களில் அந்த நாடுகள் பணியாற்றி வருகின்றன.
சிறிலங்காவை இலக்கு வைத்த இரண்டாவது அமெரிக்கத் தீர்மானம் குறித்த தூதுவர் சிசனின் விளக்கம், போலியானது.
அண்மையில் முடிந்த ஜெனிவா கூட்டத்தொடரில் ஏனைய பல வாக்கெடுப்புகளில் அமெரிக்கா தனித்து விடப்பட்டிருந்த போதிலும், ஜெனிவாவில், சிறிலங்கா விவகாரம் மட்டுமே இருந்தது போல அவர் பேசியுள்ளார்.
ஊடக சுதந்திரம் குறித்து எமக்குப் போதிக்கும் அவர்கள், தமது நலன்கள் அச்சுறுத்தலுக்குள்ளான போது வித்தியாசமாக செயற்பட்டார்கள்.
விக்கிலீக்ஸ் தகவல்களை அம்பலப்படுத்தியபோது, அமெரிக்காவின் இரட்டைவேடம் வெளிப்பட்டது.
விடுதலைப் புலிகள் இருந்த போது அனைத்துலக சமூகம் பொறுப்புக்கூறச் சொல்லிக் கேட்கவில்லை.
மரணங்கள் அழிவுகள் பற்றி அவர்கள் பரப்புரைகளை முன்னெடுத்த போது தான், இதனைக் கேட்கிறார்கள்” என்றும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten