தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 april 2013

இலங்கை அகதிகள் 25 பேரை நாடு கடத்துகிறது அவுஸ்திரேலியா


அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 68 இலங்கை அகதிகள் கர்நாடகாவில் கைது
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 05:51.48 AM GMT ]
தமிழகத்தில் அகதி முகாம்களில் தங்கியிருந்த 68 இலங்கைத் தமிழ் அகதிகள், அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முற்பட்டவேளை கர்நாடக மாநிலம் மங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட முகாம்களில் தங்கி இருந்த இலங்கை அகதிகளே கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதற்காக அவர்கள் மங்களூரில் தங்கி இருந்தனர். பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரிய வந்தது.
அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இராமநாதபுரம் மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 68 தமிழ் அகதிகளும் மங்களூரில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை கர்நாடக பொலிசார் தமிழக பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை அகதிகள் 25 பேரை நாடு கடத்துகிறது அவுஸ்திரேலியா
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 06:14.31 AM GMT ]
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச் சென்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களில் 25 பேர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாடு கடத்தப்படுபவர்களிடம், அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்கியிருக்க செல்லுபடியான விசா இல்லை. அத்துடன், சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை. இதன்காரணமாகவே நாடு கடத்தப்படவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒகஸ்ட் 13ம் திகதி தொடக்கம் இதுவரை 1029 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 819 பேர் சுய விருப்பின் பேரில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten