தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

பிலிப் நேரியார் திருச்சொரூபம் உடைப்பு! தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்!- செல்வம் எம்.பி!


மக்கள் நிவாரணங்களின் அடிப்படையில் வாழ்க்கையை நடாத்தக் கூடிய சூழ்நிலை இருக்கக் கூடாது!– அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 02:12.18 AM GMT ]
மக்கள் நிவாரணங்ளின் அடிப்படையில் வாழ்கையை நடாத்தக் கூடிய சூழ்நிலை இருக்கக் கூடாது என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நிவாரணங்களில் தங்கிவாழும் மக்கள் சமூகமொன்றை உருவாக்க அரசாங்கம் தயாரில்லை.
இலங்கை மின்சார சபையையும், நாட்டையும் மீட்டெடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் கடினமான தீர்மானத்தை எடுத்தது.
எல்லாவற்றையும் இலவசமாக வழங்கும் வரையில் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இனி நிவாரணங்களை வழங்க முடியாது.
நாட்டை மீட்டெடுக்க சில கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிடும்.
வேண்டுமென்றே மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்த எந்தவொரு அரசாங்கமும் விரும்பாது.
கொடுக்கக் கூடிய அனைத்தையும் வழங்கியுள்ளோம்.
மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாரஹன்பிட்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிலிப் நேரியார் திருச்சொரூபம் உடைப்பு! தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்!- செல்வம் எம்.பி
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 02:19.07 AM GMT ]
மன்னார், அடம்பனில் புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் உடைக்கப்பட்ட சம்பவத்தை தான் வண்மையாக கண்டிப்பதாகவும், குறித்த சம்பவத்துடன் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

தற்போது நாட்டில் உள்ள தமிழ்,முஸ்ஸிம் மக்களின் வணக்கஸ்தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த வகையில் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் கண்ணாட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் கடந்த புதன் கிழமை புதன் கிழமை இரவு 11 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

பல வருடங்கள் பழமை வாய்ந்த அந்த சொரூபம் யுத்த காலத்தில் கூட எவ்வித சேதங்களையும் சந்திக்கவில்லை. குறித்த பகுதியில் கத்தோழிக்க,இந்து மக்கள் வாழ்ந்து வருகின்ற வகையில் அந்த மக்களுக்கிடையில் வன்முறையினை கட்டவிழ்த்து விட இப்படிப்பட்ட சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே பொலிஸார் இந்த விடையத்தில் நீதியான விசாரனைகளை மேற்கொண்டு மக்களுக்கிடையில் பிரிவினை வாதத்தையும்,வன்முறையினையும் தோற்றுவிக்க குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளைக்காரனின் வால்களுக்கு இந்துக்கோயிலோ பள்ளிவாசலோ  உடைக்கப்பட்டால் கவனிப்பு இருக்காதுதேவாலயமும் பாதிரிகள் மடமும் தட்டுப்பட்டாலும் துடித்துப்போய் துள்ளிக்கொண்டு நியாயம் கேட்டு வந்திடுவார் அடிமைகளாய் பணத்துக்கு!!




Geen opmerkingen:

Een reactie posten