தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 april 2013

தமிழக அரசு ஒத்துழைத்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்!- மத்திய அமைச்சர் நாராயணசாமி!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் மக்களின் மீது அக்கறையற்றவர்! அசாத் சாலி
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 12:07.37 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், முஸ்லிம் மக்களின் மீது அக்கறையற்றவர் என தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார்.
நாட்டில் இன்று முஸ்லிம்  மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஹக்கீம் உலக தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்தவுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் மீது அக்கறையற்றவர் என தெரிகின்றனது. என அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் மனதில் மாற்றமொன்றினை கொண்டுவர அரசாங்கம் அமைச்சர் ஹக்கீமை பயன்படுத்தியுள்ளது எனவும் அசாத் சாலி குற்றஞ்சாட்டினார்.
நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற, அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அசாத் சாலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பலாங்கொடையிலுள்ள குரகல்ல – ஜெய்லானி பள்ளிவாசல் விடயத்தில் தலையிடுவதற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு என்ன அதிகாரமுள்ளது. குறித்த இடம் தொல்பொருள் பிரதேசம் என்பதால் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் குறித்த விவகாரத்தில் தலையிட முடியும்.
ஆனால் பாதுகாப்பு செயலாளர் குறித்த பிரதேசத்திற்கு அண்மையில் விஜயம் செய்துள்ளார். இதன்மூலம் இந்த பிரச்சினையில் இவர் தலையிடுகின்றார் என்பது தெரியவருகின்றது.
தற்போது குனூத் அந்நாஸிலா ஒதுவதை நிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு எந்தவித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தெரிவித்துள்ளது.
குனூத் அந்நாஸிலா ஒதுவதை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரினால் வெளியிடப்பட்ட ஊடாக அறிக்கை பாதுகாப்பு அமைச்சிலிருந்தே வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையாகின்றது.
முஸ்லிம்களுக்குரிய பிரச்சினை இதுவரை முடியவில்லை. இதனால் தொடர்ந்து குனூத் ஓதவும். பிரச்சினைகள் முடியும் வரை தொடர்ந்து குனூத் அந்நாஸிலாவை ஓதவும்.
தற்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தியின் பேச்சை காணவில்லை.
அவரும் பொது பல சேனவுடன் இணைந்து அமெரிக்கா சென்றுவிட்டாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

மாகாண முதலமைச்சர்களின் முடிவுகளின்படியே படையினர் காணிகளை எடுக்க வேண்டும்! கோத்தபாய உத்தரவு
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 12:24.23 AM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் இனி பாதுகாப்பு படையினர் காணிகளை கையகப்படுத்தும் போது அந்தந்த மாகாண முதலமைச்சர்கள் என்ன முடிவுகளை எடுக்கிறார்களோ அதன்படிதான் செய்ய வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கட்டளையிட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்தார்.
கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் புல்மோடைப் பகுதியில் முஸ்லிம் மக்களின் காணிகளை கையகப்டுத்தியது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தி, மாகாண சபையிலும் விவாதத்துக்கு வந்தது.
இதையடுத்து மாகாண சபையின் முதலமைச்சர், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ரம்லான் முகமது அன்வர் உட்பட பலர், நேற்று புதன்கிழமை மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் பைசர் முஸ்தபா அவர்களுடன் பாதுகாப்புச் செயலரை சந்தித்து பேசியுள்ளனர்.
இதன் போதே பாதுகாப்பு படையினர் முதலமைச்சரின் முடிவுகளை ஒட்டியே காணிகளை கையகப்படுத்த வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக நஜீப் ஏ மஜீத் தமிழோசையிடம் கூறுகிறார்.
இவ்வகையில் அண்மையில் புல்மோட்டை பகுதியில் கடற்படையினர் கையகப்படுத்திய உரிமம் பெறப்பட்ட காணிகளை அவர்களிடம் மீண்டும் வழங்குமாறும் பாதுகாப்புச் செயலர் தெரிவித்ததாகவும் மாகாண முதல்வர் தெரிவித்தார்.
அரசியல் சாசனத்தின் 13வது சட்டத் திருத்தத்தின்படி மாகாண சபைகளுக்கு காணி தொடர்பான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை தான் ஆதரிப்பதாகக் கூறும் நஜீப் ஏ மஜித் அவர்கள், அண்மையில் பதுளையில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.


தமிழக அரசு ஒத்துழைத்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்!- மத்திய அமைச்சர் நாராயணசாமி
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 01:42.24 AM GMT ]
மத்திய அரசுடன் தமிழக அரசு ஒத்துழைத்தால் இலங்கை கடற்படையால் தமிழக, காரைக்கால் மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி. 
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 26 பேர், இலங்கைக் கடற்படையினரால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று புதன்கிழமை காரைக்கால் வந்த அமைச்சர் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 7 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என மீனவர்களின் உறவினர்கள் மூலம் அறிந்த அமைச்சர், இலங்கை தூதரக அதிகாரியை செல்போனில் தொடர்புகொண்டு, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசினேன்.
அதுபோல் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் 14 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவ உதவிகளை செய்ய தூதரக அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் இராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகின்றனர்.
இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாக அந்நாட்டு மீனவர்கள் அளிக்கும் புகாரால், தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகின்றனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண 2 ஆண்டுகளாக மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இருநாட்டு மீனவர்களும் அமர்ந்து பேசி, எந்தெந்த எல்லையில் யார் மீன்பிடிப்பது என்று ஒப்பந்தம் செய்து கொள்வதே இந்த முயற்சி.
இதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு 2 கடிதங்களை வெளியுறவுத் துறைச் செயலர் எழுதியும் இதுவரை பதில் இல்லை.
மத்திய அரசுடன் தமிழக அரசு ஒத்துழைத்தால், இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten