தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 april 2013

அரசாங்கத்தை வெட்கமடையச் செய்யும் வகையிலான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை: வாசுதேவ நாணயக்கார!


அரசாங்கத்தை வெட்கமடையச் செய்யும் வகையிலான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் காரியாலயம், உதயன் பத்திரிகை அலுவலகம் போன்றன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. எதிர்க்கட்சியினரின் ஜனநாயக உரிமைகளையே கூடுதலாக உறுதிப்படுத்த வேண்டும்.
வடக்கில் எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க முடியாவி;ட்டால் அது நாட்டின் ஜனநாயகம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பும்.
“மன்னரை ஈக்களிடமிருந்து பாதுகாப்பதற்காக போர் வாளை எடுத்த முட்டாள்களை” பாதுக்க முயற்சிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten