பி.பி.சி. தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில், சமீபத்தில் இலங்கை சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர் சவுகத் ராய், “இலங்கையில் நாங்கள் கண்டது, கேட்டது பற்றி மத்திய அரசிடமும், நாடாளுமன்றத்திலும் பேசப்படும். இலங்கை அரசு இனப்பிரச்சினைகான தீர்வைக் காணும் எனும் நம்பிக்கை எனக்கு இல்லை. இலங்கை ஜனாதிபதியை சந்தித்தால் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். அது இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் எனும் காரணத்தாலேயே ஜனாதிபதியைச் சந்திப்பதில் எமது குழு ஆர்வம் காட்டவில்லை” என்று தெரிவித்தார்.
என்னங்க இது ?
ஜனாதிபதி மூத்த சகோதரர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷேவை சந்தித்து போட்டோ எடுத்துகிட்டீங்க ! இளைய சகோதரர் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷேவை சந்தித்து போட்டோ எடுத்துகிட்டீங்க ! யாழ்ப்பாணத்தில் மாலை போட்டுக்கொண்டு உங்களை நீங்களே விதவித போஸில் போட்டோ எடுத்துகிட்டீங்க ! நீங்கள் சிகரெட் புகைத்தபடி வீதி -வலம் வந்ததை மீடியா போட்டோ எடுத்தாங்க. இதுக்கெல்லாம் கவலைப்படாதவங்க, ராஜபக்ஷேவுடன் போட்டோ எடுத்ததை கண்டா கலங்குவாங்க ?
சந்தேகம் இருந்தால், டி.ஆர்.பாலு, திருமா ஆகியோரிடம் கேட்டிருக்கலாமே ! முதலில அந்த தேதியில மகிந்தர் ஊரில தான் இருந்தாரா ?
Geen opmerkingen:
Een reactie posten