[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 06:48.47 AM GMT ]
கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி இராமேசுவரம் மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 மீனவர்களும் இன்று காலை தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 19 பேரும் மீனவர்கள்தான். வேறு எந்த குற்றச்சாட்டும் அவர்கள் மீது இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து மீனவர்கள் 19 பேரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊர் திரும்புவார்கள்.
இதுதவிர, மேலும் இலங்கை சிறையில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் விடுவிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மனித புதைகுழி பிரதேசத்தில் நடமாடிய மர்ம நபர்கள் யார்?
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 07:03.14 AM GMT ]
மாத்தளை மனித புதைகுழி உள்ள பிரதேசத்தில் நேற்று இரவு வேளையில் பாதுகாப்பு பிரிவினர் என சந்தேகிக்கப்படும் சிலர் நடமாடியதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சுமத்தியுள்ளது.
இக்குழுவினர் இடையிடையே நடமாடியதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று இரவு எட்டு மணியளவில் ஜீப் ஒன்றில் இராணுவ சீருடையைப் போன்ற உடை அணிந்த 10 பேர் கொண்ட குழு மனித புதைகுழி உள்ள இடத்தில் நடமாடியதாக தமது கட்சியின் மாத்தளை மாவட்ட உறுப்பினர் தகவல் வழங்கியதாக சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு சோமவன்ச அமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து சோமவன்ச அமரசிங்க பொலிஸ்மா அதிபரிடம் தொலைபேசி மூலமாக முறையிட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten