[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 05:20.36 AM GMT ]
ஐயா சி.பா. ஆதித்தனார் உருவாக்கிய நிறுவனங்களை தொடர்ந்து வளர்த்து காத்து வந்தவர். தென் தமிழ்நாட்டில் கல்விநிலையில் பின் தங்கிய பிற்பட்ட மக்களுக்கு உறுதுணையாக ஐயா ஆதித்தனார் தொடங்கிய கல்லூரிகளை மேலும் விரிவுபடுத்தி பொறியியல் கல்லூரி போன்றவற்றை நிறுவி அறிவியல் வளர்த்தவர்.
சிங்களப் பேரினவாதிகளால் தமிழராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திலும் அதன் மதிற்சுவரிலும் அதன் புனிதத்தன்மையை கேவலப்படுத்தும் விதத்தில் ஆடைகளைப் போட்டு சிங்கள, முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதற்கு தமிழ் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஐயா தொடங்கிய தினந்தந்தி இதழ் தொடக்கம், அத்துடன் இணைந்த சிற்றிதழ்கள் அனைத்தையும் சிறப்புடன் நடத்தியவர்.
தமிழ்நாட்டின் கலை, பண்பாட்டின் அடையாளங்களான திருச்செந்தூர் முருகன் கோயில் போன்ற பண்டையக் கோயில்கள் பலவற்றின் புத்துருவாக் கத்திற்குத் துணை நின்றவர்.
தமிழ்நாட்டின் சிறந்த உயர்ந்த இலக்கியர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்தவர். சிவந்தி ஆதித்தன் கையால் உதவி பெறாத தமிழ்நாட்டில் அமைப்புகள், இயக்கங்கள், மன்றங்கள் என எதுவுமே இல்லை.
மார்வாடி, மலையாளி, குசராத்தி, சேட்டு, என தமிழர் நகரங்களில் குவிந்துள்ள நிலையில், வணிகத்துறையில் தலைமிர்ந்த தமிழராக விளங்கி, தமிழர்க்குப் பெருமை சேர்த்தவர்.
தமிழீழ, விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் உள்ளவராகவும், அவர்களின் துயங்களை தாங்க முடியாது கண்ணீர் சிந்துபவராகவும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற துடிப்புள்ளவராகவும் இருந்தார் என்பதை நான் அறிவேன்.
ஐயாவின் பிள்ளை சிவந்தி ஆதித்தன் அவர்களின் மறைவுக்கு, தமிழீழத்திலும், தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் சிதறி வாழும் ஈழத்தமிழர் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழராய்ச்சி நினைவிடத்தை கேவலப்படுத்திய சிங்கள முஸ்லிம் வியாபாரிகள்
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 06:19.46 AM GMT ]
சித்திரைப் புதுவருடப் பிறப்பினை முன்னிட்டு யாழ்.குடா எங்கும் வியாபாரம் களைகட்டியிருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை விமர்சிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களுக்கு எதுவித அருகதையும் கிடையாது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் N.M. றம்ழான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தென் இலங்கையில் இருந்து வந்த வியாபாரிகளால் யாழ்குடா எங்கும் வீதிகளில் கடைகள் போடப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.
வர்த்தக நிலையங்களைத் திறந்து வைத்து வரி கட்டி வியாபரம் செய்யும் நிலையில், இவர்கள் வீதிகளில் நடைபாதைகளில் கடைகளை விரித்து மலிவான விலையில் விற்பதால் வர்த்தகர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அத்துடன், எங்கெங்கெல்லாம் கடைகளை போட முடியுமோ அங்கெல்லாம் எந்தவித அனுமதியுமின்றி கடைகளைப் போட்டு தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்கள, முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அவ்வகையில் சிங்களப் பேரினவாதிகளால் தமிழராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்திலும் அதன் மதிற் சுவரிலும் ஆடைகளைப் போட்டு வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பந்தனை விமர்சிப்பதற்கு அஸ்வருக்கு எதுவித அருகதையும் கிடையாது!- N.M. றம்ழான்
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 06:42.43 AM GMT ]
அவர் விடுத்துள்ள அறி;க்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இன்று நாட்டில் நலாபுறங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு இன்று முஸ்லிம் சமூகம் அடிமைச் சமூகமாக அமைச்சர்கள் இருந்தும் அனாதைகளாக தங்களது மத அனுஸ்டானங்களைக் கூட சுதந்திரமாக நிறைவேற்ற முடியாது அச்சத்தோடு வாழ்ந்து வருகின்ற இக்கால கட்டத்தில் வாய் திறந்து பேச வேண்டிய இடத்தில் பேச முடியாத ஊமைகளாக முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் பயந்தான் கொள்ளிகளாக இருக்கின்ற போது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை விமர்சிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.
தனது பாராளமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் புனித இஸ்லாத்திற்கு எதிராகவும் மிகவும் சுதந்திரமாக நடந்தேறும் பல்வேறு அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத முதுகெலும்பு இல்லாத கையாலாகாத பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்கள் முஸ்லிம் மக்கள் மீது இழைக்கப்படும் மத அடக்கு முறையை எதிர்த்து குரல் கொடுத்த இரா சம்பந்தன் அவர்களை விமர்சிப்பது வேடிக்கையானது.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்த முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் இன்று முஸ்லிம்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றார் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்கள் இன்று என்ன செய்கின்றார்.
இதுவரையும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எத்தனையோ அநீதிகள் அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டும் அதற்காக ஒரு முறையேனும் குரல் கொடுத்தாரா? அல்லது தடுத்து நிறுத்தினாரா? எததையும் செய்ய முடியாத பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் இரா சம்பந்தன் அவர்களை விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது.
முஸ்லிம் சமூகம் பற்றி ஒரு துளியேனும் கவலைப்படாது முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்பவர்களை விமர்சிப்பதும் தனது சுயநலத்திற்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுப்பதும் ஏனையவர்கள் முஸ்லிம் சமூகம் சார்ந்து எடுக்கும் நல்ல பல தீர்மானங்களை அதிகாரத் தரப்பினரிடம் போட்டுக் கொடுத்து தனது விசுவாசத்தை காட்டி வயிறு வளர்க்கும் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களை ஒரு முஸ்லிம் என்று கூறுவதில் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அதேபோன்று இன்று முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளையும் தேவைகளையும் பேச வேண்டிய இடமான பாராளுமன்றத்தில் பேசுவதை விட்டு விட்டு தில் இல்லாத ஒரு சில அரசியல் கோமாளிகள் சம்மாந்துறைக்கு வந்து சாமர்த்தியமாக கதை சொல்கின்றார்கள்.
தான் பேச வேண்டிய இடத்தில் பேசியும் சண்டை பிடிக்க வேண்டிய இடத்தில் சண்டை பிடித்ததாகவும் தான் தனது வாழ்நாளில் அரசியலுக்காக என்றும் பொய் கூறியது கிடையாது என்று கூறுகின்ற முஸ்லிம் தலைமைகளுக்கு மத்தியில் தனது சகோதர இனம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு முஸ்லிம் சமூகம் நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten