மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அண்மையில் இலங்கையர்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களை பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தமிழக மாநில அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவி;துள்ளார்.
மத்திய மாநில அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் இலங்கையர்களை பாதுகாக்கும் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகளுக்கு அசோக் காந்த அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்களுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வந்த அசோக் காந்தா இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் பதவியொன்றுக்காக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten