ஈழத்தமிழர்களுக்கு வரலாற்று ரீதியான இறையாண்மை இருந்தது. அது இடையில் சிங்களவர்களால் பறிக்கப்பட்டது. மீண்டும் ஈழத்தமிழர் இறையாண்மையை விடுதலைப்புலிகள் வென்றெடுத்தார்கள்.
தங்களுக்கான வங்கிகள், பள்ளிகள், காவல்துறை என்று தமிழீழ இறையாண்மை அரசினை நடத்தினார்கள். இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பது ஈழத்தமிழர் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இனப்படுகொலை அழிவுக்கு தீர்வுக்கான சுதந்திர தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பு என்று தோழர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி மாணவர் பாசறையின் சார்பில் நேற்று மாலை 6.00 மணிக்கு சென்னை, தியாகராய நகர். கோபாதி நாராயணசாமி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு குறித்த வைகோ புத்தகம் மற்றும் உரை ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக மாணவர்கள் போராட்டம் ஈழத்தமிழர் நெஞ்சத்தில் நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளது: வைகோ உரை
தாய்த்தமிழக மாணவர்கள் போராட்டம் ஈழத்தமிழர் நெஞ்சத்தில் நம்பிக்கை ஒளியை ஏற்றியுள்ளது. இளைய தலைமுறையினரின் போராட்டம் தமிழக வரலாற்றிலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தனக்குள்ளது. தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு பாசறை அமைத்துக்கொடுத்தவரும் எப்பொழுதும் தன்னை முன்னிலைப்படுத்தாது செயல்படும் சகோதரர் கொளத்தூர் மணி அவர்கள் “அண்ணா இந்தச்செய்தியை மக்களிடம் நீங்கள் பேசினால் சரியாக இருக்கும்” என்று தன்னை முன்னிலைப்படுத்தாது பல்வேறு புதிய செய்திகளை என்னிடம் கூறி மக்களுக்கு செய்திகள் சென்றடையவைத்துள்ளார் என்று வைகோ அவர்கள் தனது உரையில் கூறியுள்ளார்.
வைகோ உரை:1
வைகோ உரை:2
இயக்குநர் புகழேந்தி தங்கராசு உரை
தோழர் திருமுருகன் உரை
வைகோ உரை:2
இயக்குநர் புகழேந்தி தங்கராசு உரை
தோழர் திருமுருகன் உரை
Geen opmerkingen:
Een reactie posten