தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

கனடியத் தமிழர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படாத தீர்மானமும்!!


விடுதலைப் புலிகளுக்கு உதவிய சிங்கள மீனவருக்கு இரண்டு வருட கடூழிய சிறை
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 05:54.25 PM GMT ]
கொழும்பு துறைமுகம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த தேவையான தகவல்களை வழங்கியவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையை விதிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி பி. பத்மன் சூரசேன இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
விடுதலைப்புலிகளிடம் மூன்றரை லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு, தகவல்களை வழங்கியதாக கூறப்படும் சிலாபம் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த அன்டன் ரோஷன் நிஷாந்த பெர்ணான்டோ என்ற மீனவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2006 ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி மற்றும் 2006 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புலிகளின் கடற்படைத் தளபதி சூசையை சந்தித்துள்ளார்.
அவரது ஆலோசனையின்படி கோபால் லோகேஷ்வரன் என்ற புலி உறுப்பினருக்கு சிலாபத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு படகில் செல்ல வழியை காட்டிக் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மீள்குடியேற்ற விவகாரம்: கேப்பாபிலவு மக்களை அச்சுறுத்தும் இராணுவத்தினர்!
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 06:46.15 PM GMT ]
முல்லைத்தீவு – சீனியாமோட்டை காட்டுப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டாயப்படுத்தலின் கீழ் தங்கவைக்கப்பட்டிருக்கும் கேப்பாபிலவு, சீனியாமோட்டை, சூரிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு தற்காலிக இடத்திலேயே நிரந்தர வாழ்வுரிமம் வழங்க படையினர் இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், இதற்கு மறுப்புத் தெரிவிப்போர் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் மேற்படி 3கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. மாறாக அந்த மக்களுடைய விருப்பத்திற்கு முரணாக சீனியாமோட்டை காட்டுப்பகுதியில் இந்த மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் குடியேற்றப்பட்டனர். இதன் பின்னர் மிகவும் மெதுவாகவும், இரகசியமாகவும் அந்த இடத்திலேயே குடும்பம் ஒன்றுக்கு கால் ஏக்கர் வீதம்,காணி கொடுக்கப்பட்டு, படையினரால் சிறிய வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த மக்களை குறித்த தற்காலிக இடத்திலேயே நிரந்தரமாக தங்க வைப்பதற்காக அவர்களது காணிகளுக்குரிய ஆவணங்களை இராணுவத்தினரே நேரடியாக தொடர்புகொண்டு பெற்றுக் கொடுத்துவருவதாகவும், கிராமசேவகர்களை இந்தப்பகுதியிலிருந்து பணியாற்று மாறும் படையினர் கோரியுள்ளனர்.
இந்த இரகசிய நடவடிக்கைக்கு இராணுவத்தினால் நியமிக்கப்பட்ட மேற்படி கிராமங்களுக்கான கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர், மற்றும் பிரதிநிதிகளும் உடந்தையாக இருந்து வருகின்றனர். இதன்மேல் நம்பிக்கை கொண்டு பல குடும்பங்கள் தமது தற்காலிக இருப் பிடங்களுக்குரிய ஆவணங்களை பெற்றுக் கொண்டிருப்பதாக மக்கள் குறிப்பிடுவதுடன், அவ் வாறு எதிர்ப்பு காண்பிக்காதவர்கள் இராணுவத்தினரால் கவனிக்கப்படுவதாகவும், மக்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே கேப்பாபிலவு, முள்ளிவாய்க்கால் மக்கள் ஒரு தொகுதியினர் புதுக்குடியிருப்பு- திம்பிலி காட்டுப்பகுதியினுள் குடியேற்றப்பட்டு பின்னர் அவர்களுக்கும் மேற்கண்டவாறே தற்காலிக இருப்பிடங்களுக்கான ஆவணங்கள் வழங்கப்பட்டது. தற்போது அவர்கள் திம்பிலி கிராம அலுவலர் பிரிவிலேயே நிரந்தரமாக பதியப்பட்டு, சொந்த இடங்களுக்குச் செல்லும் எண்ணத்தையே கொள்ள முடியாமல் திணறிவருகின்றனர்.
இந்நிலையிலேயே கடந்தவாரம் முதல் சீனியாமோட்டை பகுதியிலும் இராணுவத்தினரால் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்களில் நிரந்தர உரிமம் வழங்கும் நடவடிக்கையினை இராணுவத்தினர் இரகசியமாக மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இதனால் கேப்பாபிலவு உள்ளிட்ட 3கிராமங்களை உள்ளடக்க அமைக்கப்பட்டிருக்கும் படை முகாம் நிரந்தரமாக அமைக்கப்படப்போவதுடன், இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராமங்களுக்குச் செல்லும் எண்ணத்தையும், தமது கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்க வலியுறுத்தி நீதிமன்றில் தொடர்ந்த வழக்கையும்  கைவிடும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வெளிநாட்டிலிருந்து போலிப் பிரசாரம் செய்வோர் நேரில் வந்து உண்மையை அறிய வேண்டும்! - கோத்தபாய
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 08:29.30 PM GMT ]
தவறான பிரசாரத்தை முன்னெடுத்துக் கொண்டு வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கை வந்து உண்மை நிலைமையை அறிய வேண்டுமென பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
தொப்பிக்கலவில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உரிமைகள் பூங்கா மற்றும் உயிர்நீத்த வீரர்களுக்காக அமைக்கப்பட்ட இராணுவ ஞாபகார்த்த தூபியைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த கோத்தபாய,
30 ஆண்டு யுத்த வெற்றிக்குப் பின்னர் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இதுபற்றி அறிந்துகொள்ளாத, இலங்கை வராதவர்கள் தற்பொழுது நாட்டுக்கு வந்து உண்மை நிலைமையை அறிந்துகொள்வதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது.
தொப்பிக்கல பகுதி வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இடமாகும். இங்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர். எனினும், கடந்த காலங்களில் இந்த ஒற்றுமைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. யுத்த வெற்றிக்குப் பின்னர் இங்கு அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க இடங்கள் சுற்றுலாவுக்கும், கல்வி அறிவூட்டும் நோக்கிலும் மக்கள் பார்வையிட வசதிசெய்துகொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது கூறினார்.
டில்மா நிறுவனத்தின் அனுசரணையுடன் 25 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருக்கும் மரபுரிமைப் பூங்காவில், கிழக்கு மாகாண யுத்த வெற்றியின் ஞாபகார்த்தக் கண்காட்சிக் கூடமொன்றும் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷர் ஹர்ஷ அபேவிக்கரம, பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்கக்கோன், சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்தபீரிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்காக ஒருநிமிட மெளனஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டதுடன், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொப்பிகலையில் இராணுவ நினைவுத் தூபி திறப்பு
இலங்கை இராணுவத் தளபதி மேஜர் லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அனுசரணையின் கீழ் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார்.
30 வருட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்த தொப்பிகலைப் பிரதேசம் மீட்டெடுக்கப்பட்டதன் நினைவாக அங்கு நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த நினைவுத்தூபியையே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று திறந்து வைத்தார்.
அத்துடன் தொப்பிகலையில் இராணுவ பாரம்பரியத்தைக் கொண்ட பாரம்பரிய பூங்காவொன்றையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத் தளபதி மேஜர் லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இலங்கை கடற்படைத் தளபதி, விமானப் படைத்தளபதி, பொலிஸ் மாஅதிபர் என்.கே.இலங்கக்கோன், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கிழக்கு மாகாண இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
2ம் இணைப்பு
இலங்கையில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் சுற்றுலாத் தலமாக மாற்றம்
இலங்கையின் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக இருந்த இடம் இப்போது சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டிருக்கிறது.
தனி ஈழம் கேட்டு 30 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சி முகாமாக விளங்கியது  தொப்பிகல புதர்காடுகள்.
அந்த இடத்தை 2007-ம் ஆண்டு இலங்கை இராணுவம் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
அதன்பின்னர், 2 மாதங்களில் புலிகள் தங்கள் வசம் இருந்த கிழக்குப் பகுதி முழுவதையும் இராணுவத்திடம் இழந்தது.
இதையடுத்து, அங்கு தங்கள் செல்வாக்கை நிலை நாட்டிய இலங்கை அரசு, அந்த இடத்தை பாரம்பரிய பூங்காவாக மாற்றி அதனை பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று  திறந்து வைத்தார்.
பல இன மக்கள் வாழும் இப்பகுதியில் ஏராளமான தாவர வகைகள், விலங்கினங்கள் உள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பு இருக்கும் என்று கோத்தபாய தெரிவித்தார்.


கனடியத் தமிழர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படாத தீர்மானமும்
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 09:40.42 PM GMT ]
புலம்பெயர் சமூக வரலாற்றில் முதன் முறையாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை உருவாக்கிய பெருமை கனடாவாழ் தமிழ் மக்களையே சாரும்.
அத்துடன் அவ்வாறனதொரு சந்தர்ப்பத்தை கொடுத்து, கனடியத் தமிழர்களை ஒர் அரசியல் சமூகமாக நிறுவியதில் என்.டி.பி கட்சியினருக்கு கணிசமான பங்கு உண்டு. அதிலும், குறிப்பாக என்.டி.பி கட்சியின் மறைந்த தலைவர் ஜாக் லெயிற்றனுக்கு மிக முக்கிய பங்குண்டு.
இக்கட்சியின் தேசிய மாநாடு கடந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் 'மொன்றியல்' நகரில் நடைபெற்றது. சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை எதிர்த்துக் கண்டனத் தீர்மானங்கள் இன்று உலகம் முழுவதும் நிறைவேற்றப்படுகின்றன.
பல நாட்டு அரசுகள், அரசியற் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், தனி மனித ஆளுமைகள் இத்தகைய செயற்பாட்டில் தங்களைப் பகுதியாகவோ, முழுமையாகவோ ஈடுபடுத்தி வருகிறார்கள். தமிழக சட்டசபையில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான  தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் ( தமிழக சட்டசபை வரலாற்றிலேயே அனைவரும் ஒரு மனதாக ஆதரித்த விடயம் ) நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புலம் பெயர் தமிழ் மக்கள் அதிகம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடான கனடாவில் என்ன நடக்கும் என்பது தற்போது உலகத் தமிழ் மக்கள்  எதிர்பார்த்திருக்கும் முக்கிய விடயங்களில் ஒன்றாக உள்ளது.
அவ்வாறான ஒரு சூழ்நிலையில் கனடாவில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆதரவளித்தும், உலகளவில் அடக்கப்படும் மக்களது போராட்டங்களை ஆதரித்துவரும் தேசியக் கட்சியான என்.டி.பிக் கட்சியிடமிருந்து பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சார்பாக, ஏற்கனவே உலகளவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை மேலும் பலப்படுத்தக்கூடிய வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கனடியத் தமிழர்கள் முழு நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தார்கள்

இதற்கு முன்னோடியாக என்.டி.பிக் கட்சியின் 'ஸ்காபுறோ - ரூஜ்ரீவர்' (தமிழ் பாராளுமன்ற உறுப்பினரது தொகுதி) தொகுதிக் கிளையின்  நிர்வாக சபையைத் தேர்வு செய்வதற்காக அண்மையில் நடைபெற்ற  பொதுக்குழுக் கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பான தீர்மானம் ஒன்று இப்பிரதேச தமிழ் என்.டி.பி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது.
அத் தீர்மானமானது இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அனர்த்தங்கள் பற்றிய அனைத்துலக விசாரணையைக் கோருகின்றது. தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றது. தமிழ் மக்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வையிலான சர்வஜன வாக்கெடுப்பைத் தமிழர் தாயகத்தில்  கோருகின்றது. இந்த ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை கனடாவைப் பகிஷ்கரிக்குமாறு கோருகிறது.
அன்றைய பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்ட இத்தீர்மானங்கள் மொன்றியலில் இடம்பெறுகின்ற தேசிய மாநாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டது. இத் தீர்மானத்தின் அவசர, அவசிய நிலை கருதி, என்.டி.பிக் கட்சியின் தீர்மான நிறைவேற்றுக்குழுத் தலைமையின் முழ ஆதரவைத் திரட்ட எமது இத்தீர்மான வடிவத்தை முன்னுரிமைப்படுத்துவதில் எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினரின் முழு ஆதரவும் கிடைக்கும் என்ற  நம்பிக்கையுடன்  கட்சி மாநாட்டுக்காக மொன்றியல்  சென்ற என்.டி.பி தமிழ் உறுப்பினர்கள் தமது பங்களிப்புக்காகக் காத்திருந்தனர். ஆனால் அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு எட்டப்படவில்லை.
பொதுநலவாய நாடுகளின்  மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகப் கனடிய ஆளும் கட்சியான 'பழமைவாதக்  கட்சி' அறிவித்துள்ளது. 'லிபரல் கட்சியும்' இந்த விடயம் குறித்துப் பாராளுமன்றுக்கு உள்ளேயும், வெளியேயும் பேசி வருகின்றது. இந்நிலையில் இந்த விடயம் குறித்துப் பாராளுமன்ற கேள்வி நேரத்தில் பலமுறை பேசிய என்.டி.பி கட்சி தங்களது மாநாட்டில் இது தொடர்பில் முக்கியத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்களிடம் இருந்தது. ஆனால் மொன்றியல் மாநாட்டிற்குச் சென்ற தமிழ் என்.டி.பி உறுப்பினர்களுக்கு எற்பட்ட அனுபவம் வேறு வகையானதாக அமைந்தது.   வெட்கப்பட்டும், அவமானப்பட்டும், தலைகுனிந்தும் மாநாட்டு மண்டபத்தை விட்டு அவர்கள் வெளியேறிதாகச் சிலரது வாக்குமூலங்கள் இருந்தன.
இந்த மாநாட்டில் சீக்கியர்கள் பிரச்சினை தொடர்பான  தீர்மானத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. 'பிராம்ரன்' தொகுதி சீக்கிய மாகாண பாராளுமன்ற உறுப்பினரான 'ஜக்மீற் சிங்' இந்திய அரசின் சீக்கியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்தி அதனால் படுகொலையுண்ட 'யாஸ்வாந்த் சிங் காரலா' என்ற மனித உரிமையாளரைக் கௌரவித்து மண்டபம் நிறைந்த ஏகமனதான ஆதரவுடன் கூடிய தீர்மானம் ஒன்றைக் கொணர்ந்து நிறைவேற்றியிருந்தார்.  அதே வேளை ஒரு இனத்தையே முற்றிலுமாக அழித்த இனப்படுகொலை  குறித்து 'ஸ்காபுறோ - ரூஜ்ரீவர்' என்.டி.பி பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
என்ன காரணம். ?
ஒரு மனித உரிமையாளரை அங்கீகரிக்கவும், கௌரவிக்கவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய என்.டி.பி கட்சியினது மாநாட்டு அரங்கில், ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் இனப் படுகொலையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஏன் நிறைவேற்றவில்லை? என்பதும்,  ஆகக் குறைந்தது சீக்கிய இனத்திற்கு நிகழ்ந்த மனிதவுரிமை மீறல்களுடன் தொடர்புபடுத்தியாவது எம் மக்கள் மீதான இனப்படுகொலை எள்ளளவேனும் பேசப்படாமல் கூட விடப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது ஒட்டு மொத்தத் தமிழர்களின் ஆதங்கமாக உள்ளது.
இது ஒருபுறமிருக்க மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினரான 'ராதிகா சிற்சபை ஈசன்' அங்கு என்ன செய்து  கொண்டிருந்தார் என்பதும் தற்போது எழுப்பப்படும் முக்கிய கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது.
இத்தீர்மானத்தை முன்னுரிமைப்படுத்துவதில் தவறிழைத்து  மெத்தனப் போக்குடன் செயல்பட்டதுடன் அக்கறை காட்டாமல் இருந்து விட்டார் என தமிழ் மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான 'ராதிகா சிற்சபை ஈசன்'  மீது பாரிய விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை தமிழ் சமூகம் தெரிவாக்கியதிலிருந்து தொடர்ந்துவரும் தேர்தலகளைச் சந்திக்க தயாராகிவரும் கனடியத் தமிழர்கள், தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்துவோம் என்பது வெறுமனே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் கூத்தா என்கின்ற கேள்விகள் எழுந்துள்ளது மட்டுமல்லாமல்,   மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுப் பதவிக்கு வந்தவர்கள் இப்படியான விடயங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களா, இல்லையா என்பது இன்று கனடிய தமிழ் மக்கள் முன் எழுந்துள்ள விவாதமாகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten