தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 april 2013

அமெரிக்கா: பாஸ்டன் மரதன் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பில் இருவர் பலி !!

அமெரிக்காவின் மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இன்று சுமார் 27 ஆயிரம் பேர் பங்கேற்ற மராத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்றவர்கள் இறுதிக் கோட்டை நெருங்கிய வேளையில் பீரங்கி முழங்கியது போன்ற சப்தத்துடன் குண்டு வெடித்தது.தொடர்ந்து 1/2 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால், மாரத்தானில் பங்கேற்றவர்கள் மூலைக்கு ஒருவராக சிதறி ஓடத் தொடங்கினார்கள். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன.

சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலீஸார், காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 2 பேர் பலியானதாவும் சுமார் 30 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஸ்டன் பொலீஸார் தெரிவித்தனர்.

இந்த குண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கி வெடிக்கச் செய்திருக்கலாம் எனவும், இது தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கக் கூடும் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வரும் ஒபாமா, காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் வெடிக்காத 2 குண்டுகளை கைப்பற்றிய போலீசார் அவற்றை செயலிழக்கச் செய்தனர். இச்சம்பவத்தையடுத்து, நியூ யார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
http://world.lankasri.com/view.php?22YOlx2bcg80C34ed4MCa020BnB4dd2zBn5303oWAO2e4C08Y3cbclOoe2




பாஸ்டன் குண்டுவெடிப்பு: குற்றவாளிகளை விரைவில் நீதி முன் நிறுத்தப்படுவர்
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 01:05.56 மு.ப GMT ]
அமெரிக்காவின் மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் இன்று சுமார் 27 ஆயிரம் பேர் பங்கேற்ற மராத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்றவர்கள் இறுதிக் கோட்டை நெருங்கிய வேளையில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழந்தது.சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலீஸார் , காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் 8 வயது குழந்தை உட்பட 2 பேர் பலியானதாவும் சுமார் 130 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஸ்டன் போலீசார் தெரிவித்தனர். இந்த குண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கி வெடிக்கச் செய்திருக்கலாம் எனவும், இது தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கக் கூடும் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தில் வெடிக்காத 2 குண்டுகளை கைப்பற்றிய பொலீஸார் அவற்றை செயலிழக்கச் செய்தனர். இச்சம்பவத்தையடுத்து, நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் அணு உலைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற சுமார் 2 மணி நேரத்திற்குள் வெள்ளை மாளிகையில் இருந்து டி.வி. வாயிலாக பொதுமக்களிடையே உரையாற்றிய ஒபாமா கூறியதாவது:- இந்த பாதக செயலை யார் எதற்காக செய்தார்கள் என்று இதுவரை நமக்கு தெரியவில்லை. யூகங்களுக்கு இலக்காகி விடாமல் மக்கள் அமைதி காக்க வேண்டும். பாஸ்டன் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவருக்காகவும் நாம் பிராத்தனை செய்ய வேண்டும்.

ஆனால், இச்சம்பவத்தின் அடித்தளத்தை கண்டு பிடித்து இதை யார் எதற்காக செய்தார்கள் என்பதை வெளிப்படுத்தி, இதற்கு காரணமானவர்களை, அவர்கள் தனிநபர்கள் என்றாலும், இயக்கம் ஆனாலும் நீதியின் முன் நிறுத்துவோம். பாஸ்டன் நகரம் உறுதியானது. அங்கு வாழும் மக்களும் மனஉறுதி மிக்கவர்கள். அவர்கள் ஒன்றிணைந்து தங்கள் நகரின் பெருமையை காப்பார்கள். அவர்களின் ஒற்றுமைக்கு ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் துணை நிற்பார்கள்.

பாஸ்டன் சம்பவத்தில் தீயணைப்பு துறையினர், தேசிய பாதுகாப்பு படையினர், பொலீஸார் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒவ்வொரு நாளும் தங்களது உயிரை ஓர் பொருட்டாக கருதாமல், ஆபத்தான சூழ்நிலையில் நாட்டு மக்களைக் காப்பாற்ற பலர் உழைத்து வருகிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு விரைவாக மீட்புப் பணியை செய்த அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும் என கூறினார்.
http://world.lankasri.com/view.php?224MC303lOo4e2BnBcb280Cdd208Ybc3nBze43Olx023WA42

Geen opmerkingen:

Een reactie posten