தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 april 2013

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கைகளின் பின்னணியில் பாதுகாப்புத் தரப்பு!!


இத்தாலியில் இலங்கைப் பெண் ஒருவர் எரியுண்டு மரணம்!- கணவர் சந்தேகத்தில் கைது செய்யப்படவுள்ளார்!
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 02:28.31 AM GMT ]
இத்தாலியில் இலங்கைப் பெண் ஒருவரின் மரணம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்படவுள்ளார்.
இத்தாலியின் அதிகாரத்தின் கீழ் உள்ள சிசிலி தீவின் கெட்டேனியாவில் வசித்துவரும் இலங்கை பெண்னின் மரணம் தொடர்பில் அவரது கணவரான இலங்கையர் கைது செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வார இறுதியில் 42 வயதாக மதுரி வர்ணகுல என்ற இலங்கை பெண் தீயில் எரியுண்டு மரணமானார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவன் சிசிலி காவற்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சிசிலி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கைகளின் பின்னணியில் பாதுகாப்புத் தரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 01:40.14 AM GMT ]
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் பாதுகாப்புத் தரப்பு இயங்கி வருவதாக குற்றம் சுமுத்தப்பட்டுள்ளது.
பல லட்ச ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு சட்டவிரோமான முறையில் கடல் வழியாக மக்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையுடன் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த திட்டமிட்ட குழுவொன்று இயங்கி வருகின்றது.
இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா செல்லும் நபர்களிடம் பல லட்சம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளும் தரப்பினர், அவர்களின் பயணம் குறித்து பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்களையும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் அலுத்கம களுவமோதர மற்றும் வாகரை போன்ற பிரதேசங்களில் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிக்கவிருந்த இரண்டு தமிழ் அகதிக் கோரிக்கையாளர் குழுக்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
எனினும், இந்தப் பயண ஏற்பாடுகளை செய்தவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
பாதுகாப்புத் தரப்பினரும், வெளிநபர்களும் கூட்டாக இணைந்து பணம் பெற்றுக் கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் குழுக்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten