தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 april 2013

பத்து வெளிநாட்டுக் கைதிகள் சிறையில் இருந்து தப்பியோட்டம் !


பத்து வெளிநாட்டுப் பிரஜைகள் மிரிஹான தடுப்பு முகாமிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக இவ்வாறு வெளிநாட்டுப் பிரஜைகள் தப்பிச் சென்றுள்ளனர். வீசா கலாவதியாகி தங்கியிருத்தல் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்தல் அல்லது வேறும் குற்றச் செயல்களில் ஈடுபடல் போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் மிரிஹான பிரதேசத்தில் வெளிநாட்டுப் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட வெளிநாட்டு பிரஜைகளில் பத்து பேரே தப்பிச் சென்றுள்ளனர்.

பாகிஸ்தான் ஊடகவியலாளர் உள்ளிட்ட நான்கு பாகிஸ்தானியர்களும் தப்பிச் சென்றவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, மிரிஹான தடுப்பு முகாமில் வெளிநாட்டுப் பிரஜைகளை தடுத்து வைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.அதிகளவான சனநெரிசல் நிலவுவதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.குறித்த முகாமில் 70 பேரை தடுத்து வைக்க முடியும் என்ற போதிலும் தற்போது 100க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படும் வெளிநாட்டுப் பிரஜைகளிடம் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten