ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, தன்னுடன் அரசியல் ரீதியாக நேருக்கு நேர் சந்தித்து பேச அஞ்சுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.
தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் தாக்குதல்களுக்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
அத்துடன், நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் குறித்தும் மகிந்தவின் அரசாங்கம் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten