தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 april 2013

கிளிநொச்சியில் பா.உ சிறீதரன், மாவை சேனாதிராசாவை சந்தித்து ரணில் கலந்துரையாடல் !


யாழ்.மாவட்டத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளி.மாவட்ட அலுவலகத்தில் காலை 11மணி முதல் அரை மணி நேரம் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், ஐ.தே.கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
சந்திப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைதீவு மற்றும் பரவிப்பாஞ்சான் பகுதிகளில் பெருமளவு நிலம் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பிலும், இராணுவத்தினரின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.
இதற்கமைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும்,ஐ.தே.கட்சினரும் இணைந்து வடக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாராளுமன்றில் ஒரு பொது விவாதத்தை நடத்தலாம் என்ற முடிவினை இரு தரப்பினரும் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு-
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் தமது சொந்தக்காணிகளுக்கு திரும்பமுடியாத நிலையில் உள்ளனர் என்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
வடபகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்து பகல் 10 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, சி.சிறீதரன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இக்கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு, பரவிப்பாஞ்சான், கிருஸ்ணபுரம், மருதநகர், உள்ளிட்ட இடங்களில் இன்னமும் மக்கள், மீள்குடியமர்வதற்கு அனுமதிக்காமல் இப்பகுதிகளை இராணுவம் தொடர்ந்தும் வைத்துள்ளது. இவ்வாறு சுமார் ஏராளம் ஏக்கர் நிலப்பரப்புகளில் இன்னமும் மீள்குடியமர்விற்கோ அல்லது பயிர்ச் செய்கைகளுக்கோ இன்னமும் அனுமதிக்கவில்லை.
இவ்வாறு தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவது குறித்து எதிர்க்கட்சி தலைவருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 30ம் திகதி கிளிநொச்சி அலுவலகத்தில் மகக்ள் சந்திப்பு இடம் பெற்ற போது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அலுவலகத்திற்கு போடப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டமை பற்றியும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் கேட்டறிந்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten