தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 april 2013

செப்.11 தாக்குதலினால் கோட்டபாயவின் மகனையும் அமெரிக்கா விசாரித்ததாம் !


உலகம் முழுவதிலும் கைது செய்யப்பட்டவர்களை இரகசியத் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும் அமெரிக்கா, பொறுப்புக்கூறும் விவகாரம் குறித்து சிறிலங்காவிடம் எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. 

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், 

“சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை மட்டும் சிறிலங்கா அரசாங்கம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யவில்லை, தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களையும் விடுவித்துள்ளது. உலகம் முழுவதிலும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம், கைது செய்யப்பட்டவர்களை, இரகசிய தடுப்பு நிலையங்கள் உள்ளிட்ட சிறைகளில் வைத்துள்ள அமெரிக்கா, பொறுப்புக்கூறல் குறித்து எம்மிடம் எப்படிக் கேள்வி எழுப்ப முடியும் ? தீவிரவாதத்துக்கு எதிரான, அமெரிக்காவின் போரின்போது, ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. அல்கெய்டா செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்து அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவரகத்திடம் (சிஐஏ) ஒப்படைத்ததாக சிறிலங்கா அரசாங்கம் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. 

செப்ரெம்பர் 11 தாக்குதலின் விளைவாக, அமெரிக்கா முஸ்லிம்களை மட்டும் இலக்கு வைக்கவில்லை. அந்தத் தாக்குதலின் பின்னர், அமெரிக்காவில் கல்வி கற்ற எனது மகன்கூட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது. 
உலகிலேயே சிறிலங்காவில் தான் சிறுபான்மையினர் அதிருப்தியை உணர்கிறார்கள் என்றில்லை, ஏனைய நாடுகளிலும் கூட அந்த நிலை உள்ளது. எல்லா சமூகங்களும் சமமானவை. பல்கலைக்கழக அனுமதிகள் இனரீதியாக இடம்பெறுவதாக சிலர் கூறுகின்ற போதிலும், அவை கண்டிப்பாக திறமை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு சமூகத்துக்கும் பாரபட்சம் காட்டாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten