இலங்கைக்கும், இந்தியாவில் தமிழ்நாட்டுக்கும் இடையிலான உறவில் தமிழர் பிரச்சின்னை காரணமாக பாரிய, உக்கிர முறுகல் நிலவி வருகின்றது.
தமிழ்நாட்டில் மிக மோசமான , கசப்பான அனுபவங்கள், துன்புறுத்தல்கள் போன்றவற்றை இலங்கையர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த யுத்தத்தின் இறுதியில் இலங்கைத் தமிழர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டில்லியில் உள்ள மத்திய அரசுக்கு தமிழ்நாடு கோரி வருகின்றது. இவை குறித்த செய்திப் பெட்டகம் ஒன்று அல் – ஜசிரா தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten