கோத்தபாயவிற்கும் தயா மாஸ்டருக்கும் இடையில் பேச்சுவார்த்தை
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 02:15.07 AM GMT ]
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ நேற்றையதினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்ட்டரை சந்தித்து பேசியுள்ளார்.
இதன் போது வடக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாரணி இராணுவ முகாமில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, மேலும் 23 பேர் பேர் கலந்துக் கொண்டிருந்தனர்.
அவர்களே இந்த முறை வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஈ.பி.டி.பியின் நிலவரம் குறித்து இன்னும் தகவல்கள் எவையும் வெளியாவில்லை.
இந்த முறை தேர்தலில் ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுமா அல்லது தனித்து நிற்குமா என்பது இன்னும் தெரியவில்லை. எவ்வாறாயினும் தயா மாஸ்ட்டர் இந்த முறை தேர்தலில் போட்டியிடவுள்ளமை தற்போதைக்குஉறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க விஜயம் வெற்றி!- பொதுபல சேனா அமைப்பு
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 02:12.42 AM GMT ]
தங்களின் அமெரிக்க விஜயம் வெற்றியளித்திருப்பதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனாவின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய குழு அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. அங்கு பல்வேறு பௌத்த பிரிவினரை சந்தித்து இலங்கை தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபலசேனா அமெரிக்காவில் தங்கி இருந்து ஆறு நாட்களில், 3 வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten