அத்துடன் இந்த துறவி, “விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் நடிக்கும் தமிழக திரைப்படங்களை தடை செய்துவிட்டு மலையாள படங்களை இலங்கையில் திரையிட்டால், அதனால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படாது” என்றும் தெரிவித்துள்ளார்.
புத்த துறவிகள் அமைப்பு இந்த ரூட்டில் செல்ல, தமிழக திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்த போவதாக, தெரிவித்துள்ளார் பிரபல சிங்கள திரைப்பட நடிகை. மாலினி பொன்சேகா என்ற இந்த பேரிளம் நடிகை, இலங்கையில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பைலட் பிரேம்நாத் என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். இதில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தான் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரது படங்களையும் தடைசெய்தால், இலங்கை நிலை என்னவாகும் ?
Geen opmerkingen:
Een reactie posten